Kaateri logo top
www.garudabazaar.com

இளம் இயக்குனருடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு.. வெளியான புகைப்படங்கள்! பின்னணி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் பிரபல இளம் இயக்குனர் சந்திப்பு நடந்துள்ளது.

SivaKarthikeyan watched Kuruthi Aattam Movie with Sri Ganesh

Also Read | "ஒத்த செருப்புக்கு பிறகு ஒத்த ஷாட்!" - பார்த்திபனின் இரவு நிழல்.. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு.!

சுயாதீன திரைப்பட இயக்குனராக தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு  ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை இயக்கினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து நடிகர் அதர்வா - நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீ கணேஷ். 

அதர்வா - பிரியா பவானி சங்கர் நடிக்கும்  'குருதி ஆட்டம்' படத்தின் சிறப்பு திரையிடல் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு படத்தை கண்டுகளித்தார். படத்தை பார்த்த பின் படத்திற்கான வாழ்த்துகளை தெரிவித்தார்.  இயக்குனர் ஶ்ரீ கணேஷ், தயாரிப்பாளர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

SivaKarthikeyan watched Kuruthi Aattam Movie with Sri Ganesh

இந்த படத்தில் கபடி வீரராகவும், நடிகர் அஜித்தின் ரசிகராகவும் அதர்வா நடித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் காந்திமதி எனும் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.

SivaKarthikeyan watched Kuruthi Aattam Movie with Sri Ganesh

இப்படத்திற்கு, இசையமைப்பாளார் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

SivaKarthikeyan watched Kuruthi Aattam Movie with Sri Ganesh

இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஆகஸ்ட் - 5 ஆம் நாள் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | இயக்குனர் கௌதம் மேனன் - விக்ரம் சந்திப்பு..மீண்டும் துவங்கும் "துருவ நட்சத்திரம்"?

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan watched Kuruthi Aattam Movie with Sri Ganesh

People looking for online information on Kuruthi Aattam Movie, Sivakarthikeyan, Sri Ganesh will find this news story useful.