www.garudabazaar.com

ஆஹா, ஒரே மாரி இருக்கே!! வைரலாகும் சித்தார்த் & அதிதி டி ஷர்ட் வாசகம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக வருபவர் சித்தார்த். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருந்த 'பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சித்தார்த், இதன் பின்னர் ஆய்த எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Siddharth and aditi rao similiar t shirt pics gone viral

Also Read | Bigg Boss -ல அசிம் உண்மையாவே மயங்கி விழுந்தாரா? .. சீரியல் நடிகை தேவிப்ரியா Frank Interview

தமிழ் மொழி தவிர, தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சித்தார்த் நடித்துள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக மஹா சமுத்திரம் என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில், ஷர்வானந்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் அவருடன் இணைந்து நடித்திருந்தனர்.

இதற்கு அடுத்தபடியாக, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் "இந்தியன் 2" திரைப்படத்தில் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த நிலையில், சமீபத்தில் சித்தார்த் பகிர்ந்த புகைப்படத்தில் உள்ள டீ ஷர்ட் குறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Siddharth and aditi rao similiar t shirt pics gone viral

மஹா சமுத்திரம் திரைப்படத்தில் நடித்த சமயத்தில், சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் நண்பர்களாக மாறி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், சித்தார்த் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், "Dogue" என குறிப்பிடப்பட்டு வெள்ளை நிற டி ஷர்ட் ஒன்றை சித்தார்த் அணிந்திருப்பது தெரிந்தது. மேலும், இந்த பதிவின் கீழ் நடிகையும் சித்தார்த்தின் தோழியான அதிதி ராவ் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அசத்தலான கமெண்ட்டுகளையும் செய்து வந்தனர்.

Siddharth and aditi rao similiar t shirt pics gone viral

அப்படி ஒரு சூழலில் தான், சித்தார்த் அணிந்திருக்கும் இதே  டி ஷர்ட்டை போன்று நடிகை அதிதி ராவ் அணிந்திருக்கும் பழைய புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் பகிர்ந்து இரண்டையும் ஒப்பிட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read | போடு..! விஜய்யின் வாரிசு Intro Song பாடப்போவது இந்த இசையமைப்பாளரா..?

தொடர்புடைய இணைப்புகள்

Siddharth and aditi rao similiar t shirt pics gone viral

People looking for online information on Aditi Rao Hydari, Siddharth, T Shirt will find this news story useful.