www.garudabazaar.com

போடு..! விஜய்யின் வாரிசு Intro Song பாடப்போவது இந்த இசையமைப்பாளரா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கின்றனர்.

Thalapathy Vijay Varisu introduction song deets

Also Read | "இவங்க கேட்டதற்காக போட்டோஷூட்".. பட்டுப் புடவை அணிந்து KGF ஶ்ரீநிதி ஷெட்டி வைரல் PHOTOS!

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். தமிழகத்தில் ஸெவன் ஸ்கிரீன் நிறுவனம் பெருவாரியாகவும்,  ரெட் ஜெயன்ட் நிறுவனம் சில பகுதிகளிலும் இப்படத்தை விநியோகிக்கின்றன.  இந்த படம் வரும் பொங்கல் சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் 3 சிங்கிள் பாடல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy Vijay Varisu introduction song deets

தமன் இசையிலான இந்த பாடல்களை விவேக் எழுதியுள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் மூன்றாவது பாடலான அம்மா பாடலை பாடகி சித்ரா பாடியுள்ளார். இந்நிலையில் வாரிசு படத்தின் விஜய் தோன்றும் அறிமுக பாடலை அனிருத் பாடவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Thalapathy Vijay Varisu introduction song deets

லிரிக் வீடியோ தயாராகிக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் தெரிகிறது. மேலும் நேரு விளையாட்டு அரங்கத்தின் நிகழ்வில் இசையமைப்பாளர் அனிருத் பெர்ஃபார்ம் பண்ணவிருப்பதாகவும் தெரிகிறது.

Thalapathy Vijay Varisu introduction song deets

இசையமைப்பாளர்  மற்றும் பாடகர் அனிருத் நடிகர் விஜய் நடித்த பல படங்கள் உட்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார். பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | புது வீட்டுக்கு குடியேறி பால் காய்ச்சிய G.P. முத்து.. குடும்பத்துடன் பகிர்ந்த வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Varisu introduction song deets

People looking for online information on Anirudh, SS Thaman, Thalapathy Vijay, Varisu, Vijay will find this news story useful.