www.garudabazaar.com

Ponniyin Selvan: "யாக்கை திரி".. பாட்டை போட்டதும் Vibe ஆன சித்தார்த் & த்ரிஷா.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Trisha Siddharth Dancing for Yakkai Thiri Song in PS1 Trailer Launch

Also Read | "காடெல்லாம் உன் அரசாங்கம்".‌. யுவன் இசையில் 'நானே வருவேன்' முதல் சிங்கிள் பாடல்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும்  நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

Trisha Siddharth Dancing for Yakkai Thiri Song in PS1 Trailer Launch

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், நேற்று இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைத்ரி என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

Trisha Siddharth Dancing for Yakkai Thiri Song in PS1 Trailer Launch

இச்சூழலில் விழா மேடையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "ஆய்த எழுத்து" படத்தில் இடம்பெற்ற "யாக்கை திரி" பாடலை பாடகர்கள் பாடும் போது, த்ரிஷாவுக்கு பின் இருக்கையில் அமர்ந்து இருந்த நடிகர் சித்தார்த், த்ரிஷாவின் காதருகே வந்து யாக்கை திரி பாடலை சத்தமாக பாடினார். உடனே த்ரிஷாவும் சித்தார்த் உடன் இணைந்து யாக்கை திரி பாடலுக்கு அமர்ந்த நிலையில் நடனம் ஆடினார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

ஆய்த எழுத்து படத்தில்  த்ரிஷாவுக்கு ஜோடியாக சித்தார்த் 'அர்ஜூன்' கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

Also Read | கார்கில் போர் நினைவிடத்தில் நடிகர் அஜித்குமார் மரியாதை.. தீயாய் பரவும் சூப்பர் ஃபோட்டோ!

PONNIYIN SELVAN: "யாக்கை திரி".. பாட்டை போட்டதும் VIBE ஆன சித்தார்த் & த்ரிஷா.. வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Trisha Siddharth Dancing for Yakkai Thiri Song in PS1 Trailer Launch

People looking for online information on Ponniyin Selvan part 1, PS1 Trailer Launch, Siddharth, Trisha Krishnan, Trisha Siddharth Dancing for Yakkai Thiri Song will find this news story useful.