www.garudabazaar.com

சாய்னா நேவாலை ஆபாசமாக திட்டிய விவகாரம்: போலீசில் சித்தார்த் அளித்த வாக்குமூலம்! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் பதிவிட்ட ட்வீட் குறித்து சென்னை போலீசில் நடிகர் சித்தார்த் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

siddharth latest statement about saina nehwal controversy tweet

கடந்த ஜனவரி 5 அன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூருக்கு பிரதமர் மோடி சென்ற போது போராட்டக்காரர்கள் பிரதமர் மோடி செல்லும் வழியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பஞ்சாப் சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். 

பிரதமர் மோடிக்கு ஆதரவாக We Stand With Modi எனும் டிவிட்டர் ஹேஸ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த டிவிட்டர் ஹேஸ்டேக் டிரெண்டில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் கலந்து கொண்டார். அதில் ''ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தால், எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது, பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டிக்கிறேன்''. என பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

siddharth latest statement about saina nehwal controversy tweet

சாய்னா நேவாலின் ட்வீட்டிற்கு பதில் கருத்தாக நடிகர் சித்தார்த், சாய்னா நேவாலின் பேட்மிட்டன் (இறகு பந்து) விளையாட்டினை இணைத்து இழிவுபடுத்தும் வகையில் (06.01.2022) அன்று பதிலளித்திருந்தார். இந்த டிவீட்டிற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் வந்தன. சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யவும் தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிர காவல்துறை டி ஜி பி க்கு கடிதம் அனுப்பியது. இதைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த் மீண்டும் (10.01.2022) அன்று "தான் கூறிய பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக" டிவீட் செய்து இருந்தார்.

siddharth latest statement about saina nehwal controversy tweet

பின் , கண்டனங்கள் பெரிதாவதை உணர்ந்த சித்தார்த், டிவிட்டரில் ஒரு அறிக்கை விட்டு சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரினார். அதில் "நான் எழுதிய பதிலில் இருந்த RUDE ஜோக்கிற்காக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். எனது வார்த்தை விளையாட்டானது, எந்தவித தீய நோக்கம் கொண்டதில்லை. ஒரு பெண்ணாக இருப்பதால் தான், உங்களை தாக்க வேண்டும் என்ற நோக்கம் நிச்சயமாக எனக்கு ஏற்படவில்லை என்றும், நீங்கள் என் கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன் என்றும், நீங்கள் எப்போதும் என் சாம்பியன் தான்" என்று சித்தார்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த மன்னிப்பை சாய்னா நேவாலும் ஏற்றுகொண்டார்.

siddharth latest statement about saina nehwal controversy tweet

இந்நிலையில் சித்தார்த்தின் கொச்சை டிவீட் தொடர்பாக மகளிர் ஆணையம் எழுதியுள்ள புகார் கடித்தத்தின் அடிப்படையில் தமிழக DGP சைபர் கிரைம் போலிசாரை இது பற்றி விசாரிக்க உத்தவிட்டார். DGP உத்தரவின் படி சைபர் கிரைம் போலிசார் விசாரனையை துவக்கியுள்ளனர். விசாரணைக்காக கடந்த ஜனவரி மாதம் சித்தார்த்துக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். சம்மனுக்கு காணொளி மூலம் நடிகர் சித்தார்த் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

siddharth latest statement about saina nehwal controversy tweet

வாக்கு மூலத்தில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்த டிவீட்டிற்கும், சில மாதம் முன் ஒரு பெண் பத்திரிக்கையாளர் குறித்த டிவீட்டுக்கும் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக தன்னுடைய வாக்கு மூலத்தில் தெரிவித்திருப்பதாக சென்னை மாநகர போலீசார் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர். நடிகர் சித்தார்த்தின் வாக்குமூலம் தேசிய மகளிர் ஆணையத்திற்கு சென்னை மாநகர போலீசார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

siddharth latest statement about saina nehwal controversy tweet

People looking for online information on Chennai police, Cyber Crime, Saina Nehwal, Siddharth will find this news story useful.