www.garudabazaar.com

"குழந்தை பெற்ற பிறகும் HOT-ஆ இருக்கீங்க".. இணையவாசியின் மோசமான கேள்விக்கு ப்ரணிதா பதிலடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பிரணிதாவிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசமான கேள்வி கேட்ட நபருக்கு பதில் அளித்துள்ளார்.

Pranitha Subhash reply to a person for irrelevant question

Also Read | புது வீட்டுக்கு குடியேறி பால் காய்ச்சிய G.P. முத்து.. குடும்பத்துடன் பகிர்ந்த வைரல் வீடியோ!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை பிரணிதா சுபாஷ். தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர். குறிப்பாக தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு  அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  நடிகை பிரணிதா சுபாஷ் அறிமுகமானார்.

அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்‌. சூர்யா நடிப்பில் மாஸ் படத்தில்  நடித்து இருந்தார். அந்த படத்தின் பாடலால் மிகவும் பெயர் பெற்றார்.

Pranitha Subhash reply to a person for irrelevant question

அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படத்தில் நடித்த பிரணிதாவுக்கு தமிழ் நாட்டிலும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. பின்னர் அதர்வா  நடிப்பில்  வெளியான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நித்தின் ராஜ் என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டில் பிரணிதா   நடித்த ஹங்காமா 2 மற்றும் புஜ்- தி ப்ரைட் ஆஃப் இந்தியா ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருப்பதை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை பிரணிதா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

Pranitha Subhash reply to a person for irrelevant question

பின்னர் வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் கடந்த ஜூன் மாதம் தனக்கு பெண் குழந்தை பிறந்தது என அறிவித்தார். குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டார். அதன் பின்னர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா தனது குழந்தை பராமரிப்பு குறித்து சில கேள்விகளை கேட்டிருந்தார்.

அப்போது ஒரு நபர், "குழந்தை பெற்ற பிறகும் HOT-ஆ இருக்கீங்க".. என கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த நடிகை பிரணிதா சுபாஷ், நான் ஒரு நல்ல விஷயத்துக்கு QA செஷன் போட்ருக்கேன். எதற்கு தேவையில்லாத சம்பந்தமில்லாத மோசமான கேள்வியை கேட்கிறீங்க?" என பிரணிதா பதில் அளித்துள்ளார்.

Also Read | "இவங்க கேட்டதற்காக போட்டோஷூட்".. பட்டுப் புடவை அணிந்து KGF ஶ்ரீநிதி ஷெட்டி வைரல் PHOTOS!

"குழந்தை பெற்ற பிறகும் HOT-ஆ இருக்கீங்க".. இணையவாசியின் மோசமான கேள்விக்கு ப்ரணிதா பதிலடி! வீடியோ

Pranitha Subhash reply to a person for irrelevant question

People looking for online information on Pranitha Subhash will find this news story useful.