www.garudabazaar.com

சாய்னா நேவால் - சித்தார்த் விவகாரம்: சாய்னாவுக்கு ஆதராவாக கொதித்தெழுந்த சாய்னாவின் கணவர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத்: ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ள ட்வீட்டுக்கு சாய்னாவின் கணவர் பதில் அளித்துள்ளார்.

Saina Nehwal husband Parupalli Kashyap reacts siddharth tweet

கடந்த ஜனவரி 5 அன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூருக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது போராட்டக்காரர்கள் பிரதமர் மோடி செல்லும் வழியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாக பஞ்சாப் சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இதனால் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் பாஜக ஆதரவு தளத்தில் இருந்து குவிந்தன. 

Saina Nehwal husband Parupalli Kashyap reacts siddharth tweet

பிரதமர் மோடிக்கு ஆதரவாக We Stand With Modi எனும் டிவிட்டர் ஹேஸ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த டிவிட்டர் ஹேஸ்டேக் டிரெண்டில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் கலந்து கொண்டார். அதில் ''ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தால், எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது, பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டிக்கிறேன்''. என பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

Saina Nehwal husband Parupalli Kashyap reacts siddharth tweet

சாய்னா நேவாலின் ட்வீட்டிற்கு பதில் கருத்தாக நடிகர் சித்தார்த், சாய்னா நேவாலின் பேட்மிட்டன் (இறகு பந்து) விளையாட்டினை இணைத்து இழிவுபடுத்தும் வகையில் (06.01.2022) அன்று பதிலளித்திருந்தார். இந்த டிவீட்டிற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் வந்தன. சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யவும் தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிர காவல்துறை டி ஜி பி க்கு கடிதம் அனுப்பியது. இதைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த் மீண்டும் (10.01.2022) அன்று "தான் கூறிய பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக" டிவீட் செய்து இருந்தார்.

Saina Nehwal husband Parupalli Kashyap reacts siddharth tweet

இந்நிலையில் சாய்னாவின் கணவர் பருபள்ளி காஷ்யப், சித்தார்த் டிவீட் குறித்து  திங்களன்று ஒரு ட்வீட்டில் சித்தார்த்தை டேக் செய்து, பதில் அளித்துள்ளார். அதில், "இது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது, உங்கள் கருத்தை வெளிப்படுத்துங்கள், ஆனால் சிறந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள். இப்படிச் சொல்வது அருமையாக இருந்தது என்று நீங்கள் நினைத்தீர்கள், எனில் #notcool #ddigraceful". என ட்வீட் செய்துள்ளார்.

Saina Nehwal husband Parupalli Kashyap reacts siddharth tweet

மேலும் செய்திகள்

Saina Nehwal husband Parupalli Kashyap reacts siddharth tweet

People looking for online information on சாய்னா நேவால், சித்தார்த், பருபள்ளி காஷ்யப், Parupalli Kashyap, Saina Nehwal, Siddarth will find this news story useful.