உடல் பருமன் உள்ளவர்களுக்காக நம்பிக்கை தரும் நடிகை ஷரத்தா ஸ்ரீநாத்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 22, 2019 11:28 AM
'விக்ரம் வேதா' படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பின்னர் தல அஜித்துடன் அவர் இணைந்து நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
தற்போது அவர் விஷாலின் 'இரும்புத்திரை 2' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் உடல் பருமனாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும், ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், முதல் படம் 2014 ஆம் ஆண்டு அக்டோபரில் எடுக்கப்பட்டது. எனது முதல் சர்வதேச விடுமுறை. நான் எனது சட்டப்படிப்பின் முதலாம் ஆண்டில் இருந்தேன். ஒரு வேலையும் செய்து கொண்டிருந்தேன். அந்த வேலை எனக்கு நல்ல வருமானமும், ஜாலியான வாழ்க்கை முறையும் கொடுத்தது. அதன் காரணமாக இதற்கு முன் இல்லாத அளவிற்கு நான் உணவு உடை, படங்கள் உள்ளிட்டவற்றில் அதிக நேரம் செலவிட்டேன். அது எனக்கு உடல் பருமனை அளித்தது.
இருந்தும் மகிழ்ச்சியாக சாப்பிட்டு பிடித்த உடைளை அணிந்தும் வந்தேன். என் உடல் பருமன் குறித்த சந்தேகம் இருந்தாலும் என் சோம்பேறித்தனத்தால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முதல் ஃபோட்டோவை நான் பார்த்த போது தான் எனக்கு விஷயம் புரிந்தது. பின்னர் என் தங்குமிடத்தில் இருந்த ஜிம்மிற்கு சென்றேன். டிரட் மில்லில் முதலில் 5 நிமிடங்கள் ஓடினேன். பின்னர் 15 நிமிடங்கள், பின்னர் 40 நிமிடங்கள் என இடைவேளை இல்லாமல் தொடர்ச்சியாக ஓடினேன்.
பின்னர் இரண்டாவது புகைப்படம் டார்ஜிலிங்கில் மே 2019ல் எடுக்கப்பட்டது. அப்போது 18 கிலோ குறைவாக இருந்தேன். அதற்காக அதிகாலை 4.30 மணிக்கு எழவேண்டியிருந்தது. பொதுவாக நான் ஃபிட்டாக இல்லை. இருந்தாலும் அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்வேன். எனக்கு தெரியும் உணவை எப்படி கட்டுப்படுத்துவது என்று. ஆனால் உணவு உள்ளிட்ட விஷயங்களில் என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை.
இருப்பினும் எது என்னை இப்படி மாற்றியது தெரியுமா? நான் பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான். ஆனால் அதனை நீங்கள் லட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அழகு என்பதற்கான எல்லை என்று எதுவும் இல்லை. அதனால் உங்கள் மனதிற்காகவும் உங்கள் எடையை தாங்கி நிற்கும் கால் மூட்டிற்காகவும்உடற்பயிற்சி செய்யுங்கள். மற்ற எந்த விஷயங்களுக்காக அல்ல'' என்று குறிப்பிட்டுள்ளார்.