பிரபல இயக்குநர்களுடன் வெளிநாட்டில் 'ஹீரோ' சிவகார்த்திகேயன் - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 19, 2019 09:31 PM
பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியான படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. டி.இமான் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இதனையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன், அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது
அதன் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார். லைக்கா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ஹீரோ படத்துக்கான பாடல் ஒளிப்பதிவு பிரான்ஸில் நடைபெறுவதாக நடன இயக்குநர் சதீஷ் ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிவகார்த்திகேயன், இயக்குநர் விக்னேஷ் சிவன், நடன இயக்குநர் சதீஷ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.