‘தண்ணீருக்குள் பிரசவம்...’ - மகப்பேறு குறித்து பில்லா 2 நடிகை பரவசம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 24, 2019 10:24 AM
தல அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’ படத்தில் நடத்த நடிகை புருனா அப்துல்லா.அதை தொடர்ந்து "ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ்", கிரான்ட்மஸ்தி, ஜெய் ஹோ, உடன்சோ போன்ற ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானார்.

கடந்த மாதம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மும்பையில் புருனா அப்துல்லா – அலன் ஃப்ரேசர் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் “மை பர்த் ஸ்டோரி” என்று கூறி, "மருந்து மாத்திரை இல்லாமல் "வாட்டர் பர்" என்ற சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தை பெற்றெடுத்ததாக கூறியுள்ளார்.
குழந்தைக்கு "இசபெல்லா" என பெயரிட்டுள்ளதையும் குறிப்பிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் புருனா அப்துல்லா.