அம்மாவுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்த பிக்பாஸ் கவின்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 09, 2019 01:06 PM
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் டைட்டில் வின்னராக முகேன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல், நட்பு என பிக்பாஸ் வீட்டை எப்பொழுதும் பரபரப்பாக வைத்திருந்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியான பெரும்பாலான புரொமோக்களில் கவினே இடம் பெற்றார். இந்நிலையில் பிக்பாஸ் அறிவித்த ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
அதன் ஒரு பகுதியாக கவினின் அம்மா, பாட்டி உள்ளிட்டோர் மோசடி புகார் ஒன்றின் காரணமாக கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் அவர் அம்மா மற்றும் பாட்டியை ஜாமினில் எடுத்தார். இந்நிலையில் கவின் தனது அம்மா மற்றும் பாட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.