'நீ இல்லாம எங்களுக்கு ரொம்ப கஷ்டம்' - தனது மனைவி குறித்து மாதவன் நெகிழ்ச்சி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 15, 2019 07:43 PM
மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' என்ற பெயரில் ஒரு படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சிம்ரன் மாதவனின் மனைவியாக நடிக்கிறார். இந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் சூர்யாவும், ஹிந்தி வெர்ஷனில் ஷாரூக்கானும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றனராம். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் மாதவன் தனது மனைவியன் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், உன் வாழ்நாள் முழுவதும் இதே சிரிப்புடன் சந்தோஷமாக வைத்துக் கொள்வேன் என நம்புகிறேன்.
நமது நன்மைக்காகவும் நீ நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். ஏனா நீ இல்லாம எங்களுக்கு ரொம்ப கஷ்டம்.. நாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரிதா..!'' என்று குறிப்பிட்டுள்ளார்.