ஜொலிப்பதற்காக பிறந்தவர்….! விஷால் பற்றி அனிஷா பதிவிட்ட போஸ்ட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 30, 2019 10:41 AM
நடிகர் விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அனிஷா அல்ல ரெடி.

விஷால் அனிஷா அல்ல ரெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது மேலும் திருமணம் வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இதனிடையே இவர்களின் திருமணம் நின்று விட்டதாக சமீபத்தில் செய்திகள் பரவின.இரு தரப்பினரும் இதைப்பற்றி எதுவுமே கூறாத நிலையில் நேற்று விஷால் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிஷா அல்லா ரெட்டி அவருக்கு வாழ்த்துக் கூறி சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அனிஷா அல்லா ரெட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் விஷாலுடன் சேர்ந்து இருக்கும் போட்டோ போட்டு விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள அவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்டார். ஜொலிப்பதற்காக பிறந்தவர் நீங்கள் என்று அனிஷா வாழ்த்தியுள்ளார்