திருமணத்திற்கு பின் "அனிதா சம்பத்" பதிவிட்ட முதல் Photo இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 18, 2019 01:11 PM
சமூக வலைதளங்களில் பிரபலமான டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அனிதா சம்பத், தற்போது சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவருகிறார். சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்து புகழ் பெற்ற இவர், தற்போது கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில் கடந்த மாதம் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக சன் தொலைக்காட்சியில் செய்தி வாசித்ததாக கூறி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அனிதா.
Tags : Anitha Sampath