''என் காலில் ஒரு சர்ஜரி, அதனால...'' - நடிகை மஞ்சிமா மோகன் உருக்கமான பதிவு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 19, 2019 06:44 PM
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படம் தமிழில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தொடர்ந்து தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்' படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துல்கர் தர்பார்' படங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், சில வாரங்களுக்கு முன்பு என் வாழ்வில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறு சர்ஜரி. அதனால் ஒரு மாதம் எனது கால் காரணமாக படுக்கையில் இருக்க வேண்டியிருக்கிறது.
அதற்கு முன், ''நீங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட முக்கிய பிரச்சனை எது ? '' என்று மக்கள் என்னிடம் கேட்பார்கள். அதற்கு பெரிதாக எதுவும் இல்லை என்று பதிலளித்தேன். ஆனால் இப்போது எனது பதில் வித்தியாசமானதாக இருக்கும்'' என்றார்.