www.garudabazaar.com

"என் பையன் இன்னொரு பொண்ணோட Lifeல விளையாடிற கூடாது!".. பேட்டியில் அழுத சீரியல் நடிகை..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்றைய காலகட்டத்தில், சீரியல் மூலம் மக்கள் மத்தியில் ஏராளமான நடிகர், நடிகைகள் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில், "கேளடி கண்மணி" என்னும் தொடர் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் அறிமுகம் ஆனவர் நடிகை திவ்யா ஸ்ரீதர்.

sevvanthi serial divya sridhar about her pregnancy and baby

Also Read | Pandiayn Stores ஏன் ஒத்துகிட்டீங்க.. சுயமரியாதை எங்க போச்சு ?".. ரசிகரின் கேள்வி.. VJ தீபிகா Bold Reply.!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இதற்கு அடுத்தபடியாக, திவ்யா ஸ்ரீதர் நடித்து வந்த "மகராசி" தொடர், ரசிகர்கள் மத்தியில் அவரை பிரபலம் ஆக்கி இருந்தது. இந்த சீரியலில் நாயகியாக நடித்துவந்த திவ்யா ஸ்ரீதர் பின்னர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "செவ்வந்தி" எனும் தொடரிலும் முதன்மை கதாபாத்திரத்தில் திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார். நடிகர் மற்றும் டான்ஸரான ராகவ், இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.

குறுகிய காலத்திலேயே "செவ்வந்தி" சீரியல், பார்வையாளர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து பிரபல சீரியல் நடிகரும், "கேளடி கண்மணி" தொடரில் தன்னுடன் இணைந்து நடித்திருந்தவருமான அர்ணவை திவ்யா ஸ்ரீதர் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை திவ்யா ஸ்ரீதர், “விரைவில் எங்கள் குழந்தையை நாங்கள் எதிர்பார்க்க உள்ளோம். காதலர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக அன்புடன் இதனை பேணுவோம். எனக்கும், என் குடும்பத்திற்கும் நீங்கள் கொடுத்த அளவில்லாத அன்பிற்கும், ஆதரவிற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

sevvanthi serial divya sridhar about her pregnancy and baby

ஆனால் அதன் பின்னரே அர்ணவ் - திவ்யா ஸ்ரீதர் இருவருக்குமான பிரச்சனைகள் பூதாகரமாகின. இதில் தன் கணவர் தன்னை ஏற்காதது குறித்தும், தம் மீது வன்முறை நிகழ்த்தியதாகவும் வீடியோக்களை வெளியிட்ட நடிகை  திவ்யா ஸ்ரீதரின் குற்றச்சாட்டுகளை ஏற்ற போலீஸார், அதனை அடுத்து நடிகர் அர்ணவை விசாரித்தனர். இதன் காரணமாக நடிகர் அர்ணவ் கைதாகி பின்னர் ஜாமினிலும் வெளியானார். முன்னதாக தான் தற்போது கர்ப்பமாக இருக்கும் நடிகை திவ்யா ஸ்ரீதரின் வீட்டுக்கு சர்ப்ரைஸாக சென்ற சன் டிவி செவ்வந்தி சீரியல் குழுவினர், அவருக்கு அவரது இல்லத்திலேயே வைத்து வளைகாப்பும் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை தமது இன்ஸ்டகிராமில் நடிகை திவ்யா ஸ்ரீதர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ்க்கு தற்போது பேட்டி அளித்துள்ள நடிகை திவ்யா ஸ்ரீதர், தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்றும், அவரை இந்த சமூகத்தில் பெண்ணுக்கு மரியாதை கொடுக்கும் அளவுக்கு, பெண்ணுடைய வாழ்க்கையில் விளையாட கூடாது அந்த அளவுக்கு வளர்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று பலர் சொன்னதாக குறிப்பிட்டவர், ஆனால் தான் நன்றாக சம்பாதிப்பதாகவும், அழகாக இருப்பதாகவும் சொல்லிவிட்டு போக முடியும் எனினும் தான் தன் குழந்தையை வளர்க்க முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தான் இவ்வளவு போராட்டத்தை சந்திப்பேன் என நினைத்து பார்க்கவில்லை என்று கூறினார்.

sevvanthi serial divya sridhar about her pregnancy and baby

குறிப்பாக பொருளாதார ரீதியலான சிக்கல்கள் இருப்பினும், தான் செவ்வந்தி  சீரியலில் நடிப்பதால், சன் டிவி சேனல், தனக்காக கதையை கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய கதையாக மாற்றி வடிவமைத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். பெண் மட்டுமே ஆணை சார்ந்தவராக இருப்பது சரியல்ல. குடும்பம் என்றால் பிணைப்பு வேண்டாம். ஒருவர் இன்னொருவர் விட்டுச் செல்ல முறையான காரணம் இருக்க வேண்டும். இதை விட்டுவிட்டு வேறு வாழ்க்கை, அதை விட்டுவிட்டு இன்னொரு வாழ்க்கை என செல்வது கலாச்சாரம் இல்லை. மனிதர்களாக நாம் குடும்பம், சமூகம் என இணக்கமாக வாழவேண்டும் என்பதையே நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | விக்ரமன் பிளடி உப்பு.. ரச்சிதா பிளடி புளிப்பு.. ராமர் அட்ராசிட்டி.! ப்ரியங்கா கொடுத்த End Punch 😂

"என் பையன் இன்னொரு பொண்ணோட LIFEல விளையாடிற கூடாது!".. பேட்டியில் அழுத சீரியல் நடிகை.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

sevvanthi serial divya sridhar about her pregnancy and baby

People looking for online information on Divya Sridhar, Serial Actress, Sevvanthi will find this news story useful.