www.garudabazaar.com

காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பிரபல எதிர்நீச்சல் சீரியல் நடிகை! வைரல் PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல எதிர் நீச்சல் சீரியல் நடிகை தனது காதலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

Ethirneechal Serial Actress Vaishnavi Introducing Her Boy Friend

Image Source - SunTV

இயக்குனர் திருச்செல்வம்

சன் டிவியில் தற்போது  ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. நடிகை தேவயானி நடிப்பில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'கோலங்கள்' மெகாத்தொடரை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் தான் இந்த 'எதிர்நீச்சல்' தொடரையும் தற்போது இயக்கி வருகிறார்.

இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

Ethirneechal Serial Actress Vaishnavi Introducing Her Boy Friend

எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள்

திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகாதொடரான எதிர் நீச்சல், ஜனனி, குணசேகரன், சக்தி, கதிர், நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா, ஞானசேகரன் எனும் கதாப்பாத்திரங்களுக்கு இடையேயான கதையாக அமைந்துள்ளது. ஆணாதிக்கம், பெண் உரிமை ஆகியவற்றை மையக் கருவாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

Ethirneechal Serial Actress Vaishnavi Introducing Her Boy Friend

இந்த சீரியலில் வசு என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகை வைஷ்ணவி நடித்து வருகிறார். இந்நிலையில் வைஷ்ணவி தமது பிறந்த நாளை நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் நடிகை மதுமிதாவும் கலந்து கொண்டார்.

Ethirneechal Serial Actress Vaishnavi Introducing Her Boy Friend

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை வைஷ்ணவி, தமது காதலரை அறிமுகம் செய்துள்ளார். ஶ்ரீநி தினேஷ் எனும் நபரை காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Ethirneechal Serial Actress Vaishnavi Introducing Her Boy Friend

People looking for online information on Ethirneechal, SunTV will find this news story useful.