www.garudabazaar.com

"கல்யாணம் பண்ணிக்கலாமா?".. ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஸ்ருதிஹாசன் தமது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Actress Shruti Hassan answer about fan question about marriage

Images are subject to © copyright to their respective owners.

Also Read | எதிர்நீச்சல் சீரியலில் பட்டையை கிளப்பும் கனிகா.. இவர்தான் அவங்க கணவரா.?  

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில்  இவரும் முதன்மையானவர். வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த  போட்டோ ஷூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்வதை ஸ்ருதி ஹாசன் வாடிக்கையாக கொண்டவர்.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக 'லாபம்' திரைப்படம் தமிழில் வெளியானது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்'  படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது.

Actress Shruti Hassan answer about fan question about marriage

Images are subject to © copyright to their respective owners.

கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்கள்.

Actress Shruti Hassan answer about fan question about marriage

Images are subject to © copyright to their respective owners.

மேலும் இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில்  பாலகிருஷ்ணா நடித்து சமீபத்தில் வெளியான  வீர சிம்மா ரெட்டி படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். நடிகர் சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின.

Actress Shruti Hassan answer about fan question about marriage

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வடிவில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார் . இதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன், "சிரித்துக் கொண்டே Because.." என பதில் அளித்து தமது ஆண் நண்பர் சாந்தனு மீது ஸ்ருதிஹாசன் சாய்ந்து கொண்டார்.

Also Read | வெளிநாட்டு கால்பந்து மைதானத்தில் மகனுடன் நடிகர் அஜித்.. தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஃபோட்டோ!

"கல்யாணம் பண்ணிக்கலாமா?".. ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Shruti Hassan answer about fan question about marriage

People looking for online information on Shruti Haasan will find this news story useful.