யாரடி நீ மோகினி சீரியல் ஹீரோயின்.. ஃபோட்டோவை பகிர்ந்து சொன்ன குட் நியூஸ் 😍
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி, வள்ளி திருமணம் ஆகிய தொடர்களில் நடித்திருந்தார் நக்ஸத்ரா விஸ்வநாதன்.

Image Credit : Nakshathra viswanathan Instagram
அதிலும், யாரடி நீ மோகினி தொடரில், நக்ஸத்ரா நடித்திருந்த கதாபாத்திரம், பெரிய அளவில் தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
இதனிடையே, தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் நடிகை நக்ஸத்ரா தற்போது ஒரு குட் நியூஸ் பற்றிய செய்தியையும் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
சீரியல் நடிகை நக்ஸத்ரா எப்போதுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கக்கூடியவர். தன்னை சுற்றி நடைபெறும் விஷயங்கள் அனைத்தையுமே அவர் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு ஜூலை மாதம், நக்ஸத்ராவின் திருமணம் நடந்திருந்தது. விஸ்வா என்ற நபரை அவர் திருமணம் செய்து கொண்ட நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
Image Credit : Nakshathra viswanathan Instagram
இதனையடுத்து, தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களையும் அதிகம் பகிர்ந்தும் வருவார் நக்ஸத்ரா. இந்த நிலையில், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை நடிகை நக்ஸத்ரா தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பகிர்ந்து குட் நியூஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். முன்னதாக, இது தொடர்பாக தகவல்கள் பரவி வந்த சூழலில், தற்போது அதனை நடிகர் நக்ஸத்ராவும் பகிர்ந்து உறுதி செய்துள்ளார்.
இதனையடுத்து, நக்ஸத்ரா மற்றும் அவரது கணவர் விஸ்வா ஆகிய இருவருக்கும் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் சூழலில், நல்ல முறையில் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்றும் வாழ்த்துக்களுடன் குறிப்பிட்டு வருகின்றனர்.
யாரடி நீ மோகினி சீரியல் ஹீரோயின்.. ஃபோட்டோவை பகிர்ந்து சொன்ன குட் நியூஸ் 😍 வீடியோ