www.garudabazaar.com

ஸ்கேன் வீடியோவை வெளியிட்டு கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல சீரியல் நடிகை 😍..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தமிழ் சீரியல் நடிகை சஹானா ஷெட்டி, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

Serial Actress Sahanaa Announced Her Pregnancy with Video

Also Read | ரஜினி ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர் மரணம்..

பகல் நிலவு தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை சஹானா ஷெட்டி.  இந்த தொடரில் தமிழ் எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது தாலாட்டு தொடரில் தேவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கண்ணான கண்ணே தொடரில்  அபர்ணா கதாபாத்திரத்தில் சஹானா நடித்திருந்தார்.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் நிஷா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மேற்கொண்டு புகழ் பெற்றார். சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த அழகு தொடரில் காவ்யா மதன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

Serial Actress Sahanaa Announced Her Pregnancy with Video

சஹானா தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டில் மருத்துவர் அபிஷேக் என்பவரை திருமணம் செய்தார் சஹானா ஷெட்டி. குடும்பத்தினர் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.

Serial Actress Sahanaa Announced Her Pregnancy with Video

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சஹானா ஷெட்டி, அவ்வப்போது கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை அப்லோடு செய்வது, படப்பிடிப்பில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பவர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்கேன் வீடியோவை வெளியிட்டு, தான் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கே ஜி எப் படத்தில் இடம்பெற்ற தாலாட்டு பாட்டை பிண்ணனியில் ஒலிக்க இந்த தகவலை சஹானா அறிவித்துள்ளார்.

Serial Actress Sahanaa Announced Her Pregnancy with Video

தம்பதியருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். நடிகை ஸ்ருதி ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.

Also Read | 'வாரிசு' படத்தின் கலை இயக்குனர் சுனில் திடீர் மரணம்.. துல்கர் சல்மான் இரங்கல்!

ஸ்கேன் வீடியோவை வெளியிட்டு கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல சீரியல் நடிகை 😍.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Serial Actress Sahanaa Announced Her Pregnancy with Video

People looking for online information on Sahanaa, Sahanaa Announced Her Pregnancy, Serial Actress will find this news story useful.