www.garudabazaar.com

Pandiayn Stores ஏன் ஒத்துகிட்டீங்க.. சுயமரியாதை எங்க போச்சு ?".. ரசிகரின் கேள்வி.. VJ தீபிகா Bold Reply.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இருந்து வருகிறது.  பாண்டியன் மளிகை ஸ்டோர்ஸ் வைத்திருந்து பின்னர் முன்னேறும் சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவிமார்கள் கொண்ட கூட்டு குடும்பத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடரை மக்களும் ஆவலுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

where is your self respect fan to Pandian Stores VJ Deepika

Image Credit :  vijay television

Also Read | வெளிநாட்டு கால்பந்து மைதானத்தில் மகனுடன் நடிகர் அஜித்.. தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஃபோட்டோ!  

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவ்வப்போது ஏராளமான நடிகர், நடிகைகளும் மாறி வருகிறார்கள். முல்லை கதாபாத்திரத்தில் இதுவரை மூன்று நடிகைகள் மாறிவிட்ட சூழலில், கண்ணனின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா ரோலிலும் சிலர் மாறி கொண்ட படி இருக்கின்றனர். அப்படி இருக்கையில் தற்போது ஐஸ்வர்யாவாக நடித்து வரும் நடிகை சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகி உள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஆம், கடைசி சகோதரராக வரும் கண்ணனின் மனைவியாக நடிகை சாய் காயத்ரி, ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூழலில் தற்போது அவர் இதிலிருந்து விலகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் சற்று பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சாய் காயத்ரி பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதுவரை தனது கதாபாத்திரத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ள சாய் காயத்ரி, தன்னுடைய முடிவுக்கு மதிப்பும், சம்மதமும் தெரிவித்த விஜய் டெலிவிஷனுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

where is your self respect fan to Pandian Stores VJ Deepika

Image Credit :  vijay television

இந்த நிலையில், இனிமேல் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பது குறித்து சில தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி இதற்கு முன்பு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கத் தொடங்கியுள்ளார். மீனாவின் சகோதரி திருமணத்துக்காக ஜீவாவும் மீனாவும் விசேஷம் நடக்கும் மீனாவின் வீட்டுக்கு முன்னதாக போய்விட, பின்னாலேயே அங்கு சீர்வரிசைகளுடன் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் விஜே தீபிகா ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

where is your self respect fan to Pandian Stores VJ Deepika

Image Credit :  vijay television

இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர், “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உங்களுடைய லுக்கை வைத்து அவர்கள் ரிஜக்ட் செய்தார்கள், ஆனால் இப்போ உங்க லுக் நன்றாக இருப்பதால், மறுபடியும் அந்த சீரியலில் அழைத்துள்ளார்கள். ஆனால் அந்த சீரியலில் நடிக்கும் ஆஃபரை நீங்கள் ஏற்பீர்கள் என நான் நினைக்கவில்லை, உங்களுடைய சுயமரியாதை எங்கே போனது? இந்த ஆஃபரை நீங்கள் ரிஜக்ட் செய்திருந்தால் உங்கள் மீது இன்னும் மரியாதை வந்திருக்கும்” என கமெண்ட் பண்ணியிருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த விஜே தீபிகா, “நம்மள விட்டு ஒன்னு போயிடுச்சுனா அதுக்கு யார் காரணம்னு யோசிச்சி ரிவஞ்ச் எடுக்குறதுக்கு, கிடைக்குற வாய்ப்பை கரெக்டா பயன்படுத்தி வெற்றியாளராக மனதுக்கு பிடிச்ச மாதிரி இருக்குறதுதான் நல்ல முடிவுனு நான் நெனைக்குறேன்” என குறிப்பிட்டார்.

where is your self respect fan to Pandian Stores VJ Deepika

Image Credit :  vijay television

விஜே தீபிகாவின் இந்த ரிப்ளையை ஆமோதித்த பல ரசிகர்கள், “உங்களை ரிஜக்ட் பண்ணியிருந்தாலும் மீண்டும் உங்களை அந்த கதாபாத்திரத்துக்கு அழைக்கும் வகையில் நீங்கள் இருந்துதான் உங்கள் கடின உழைப்புக்கு சான்றாக இருக்கிறது” என பாசிடிவாக கூறி வாழ்த்தியும் வருகின்றனர்.

Also Read | எதிர்நீச்சல் சீரியலில் பட்டையை கிளப்பும் கனிகா.. இவர்தான் அவங்க கணவரா.?

தொடர்புடைய இணைப்புகள்

where is your self respect fan to Pandian Stores VJ Deepika

People looking for online information on Pandian stores, Saai Gayathri, Sai Gayathri, VJ Deepika will find this news story useful.