www.garudabazaar.com

பிரபல தமிழ் சீரியல் நடிகை தேஜஸ்வினி திருமணம்.. மாப்பிள்ளை இவரா? வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீரியல் நடிகை தேஜஸ்வினிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

Serial Actress Tejaswini Gowda Marriage Photos

Also Read |ஜிகர்தண்டா டபுள் X பட ஷூட்டிங்.. நடிகர் ராகவா லாரன்ஸை காண குவிந்த ரசிகர்கள்! VIDEO

தமிழ், தெலுங்கு,கன்னட மொழியில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் தேஜஸ்வினி கௌடா. தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சுந்தரி நீயும் சுந்தரன் நானும்" சீரியலில் தேஜஸ்வினி நடித்துள்ளார். மேலும் தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வித்யா நம்பர் ஒன் தொடரிலும் நடித்து வருகிறார். தெலுங்கு மொழியில் 'கேர் ஆஃப் அனசுயா' என்ற தொடரிலும் தேஜஸ்வினி நடித்து வருகிறார்.

Serial Actress Tejaswini Gowda Marriage Photos

சிலநாட்களுக்கு முன் தேஜஸ்வினி கௌடாவுக்கும், பிரபல சீரியல் நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் அமர்தீப் சௌத்ரிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இருவருக்கும் நேற்று திருமணம் நடந்துள்ளது. மணமக்களுக்கு நண்பர்களும் திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Serial Actress Tejaswini Gowda Marriage Photos

இது தொடர்பான திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை தேஜஸ்வினி வெளியிட்டுள்ளார்.

Also Read | நிஜ சம்பவத்தை மையமாக வைத்து மாளவிகா மோகனன் நடிக்கும் ROMANTIC படம்.. ரசிகர்களை கவரும் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Serial Actress Tejaswini Gowda Marriage Photos

People looking for online information on Serial Actress, Serial Actress Tejaswini Gowda, Tejaswini Gowda, Tejaswini Gowda Marriage Photos will find this news story useful.