'திரும்ப பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறேன்' - பிக்பாஸ் பிரபலம் அதிரடி அறிவிப்பு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 01, 2019 09:43 AM
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சரியாக இன்றுடன் (அக்டோபர் 1) 100 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஃபைனல்ஸ் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
![Sakshi entered Kavin, Losliya, Sandy Bigg Boss 3 Sakshi entered Kavin, Losliya, Sandy Bigg Boss 3](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/sakshi-entered-kavin-losliya-sandy-bigg-boss-3-photos-pictures-stills.jpeg)
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது முகேன், லாஸ்லியா, சாண்டி, ஷெரின் உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே இருக்கிறார்கள். நால்வரில் யார் டைட்டில் ஜெய்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் ரேஷ்மா, மோகன் வைத்தியா, ஃபாத்திமா பாபு, மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களுடன் உரையாடினர். இந்நிலையில் சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில், ''நாளை பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறேன். நேர்மறையான எண்ணங்களை விதைக்க, நம்பிக்கையுடன் செல்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
Entering the #Biggboss house tomorrow my friends❤️❤️
Lets spread happy vibes , positive energy and instill some confidence !
— Sakshi Agarwal (@ssakshiagarwal) September 30, 2019