''என் தளபதி, என் சூப்பர் ஸ்டார், தல...'' - தன் மகன் குறித்து வனிதா விஜயகுமார் உருக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 16, 2019 06:26 PM
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் வனிதா விஜயகுமார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பாக பேசப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் பல்வேறு நிகழ்வுகள் குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் இடும் பதிவுகள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மகன் குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ''என் தளபதி, சூப்பர் ஸ்டார், தல உலக நாயகன், என் வாழ்க்கையின் எல்லாமே அவன். என்னுடைய விஜய்ஸ்ரீ ஹரி என் அப்பா மாதிரியே இருக்கான்ல'' என்று தனது மகன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
Tags : Vanitha, Bigg Boss 3