'My பூனக்குட்டி…’ லாஸ்லியாவை நீண்ட இடைவேளைக்கு பின் சந்தித்த பிக் பாஸ் பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 09, 2019 05:22 PM
திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல்ஸ் விருது நிகழ்ச்சி சென்னையில் நேற்று (08.12.2109) நடைபெற்றது.

இதில் தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய், நிவின் பாலி, யாஷ், மஞ்சு வாரியர் இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், செல்வராகவன், லோகேஷ் கனகராஜ், அமீர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா உட்பட திரளான திரையுலகினர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ‘Most Popular person on Television’ விருது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியாவுக்கு வழங்கப்பட்டது. அவருடன் அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமியும் அங்கு வாந்திருந்தார்.
விருதுபெற்ற லாஸ்லியாவோடு செல்ஃபி எடுத்துக்கொண்ட அபிராமி எதிர்காலத்தில் இதுபோல பல விருதுகள் அவரை தேடிவரும் என இன்ஸ்டாவில் வாழ்த்தி உள்ளார்.
Tags : Losliya, Abhirami Venkatachalam