ஹீரோயின் ஆகும் ’பிக்பாஸ்’ சாக்‌ஷி அகர்வால் - விவரம் உள்ளே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த சாக்‌ஷி அகர்வால் புதிய படம் ஒன்றில் ஹீரோவுக்கு நிகரான ஆக்‌ஷன் வேடத்தில் நடிக்க உள்ளார்.

Big Boss fame Sakshi Agarwal is up to act in a woman centric action flick

’களிறு’ திரைப்படத்தை இயக்கிய சத்யா இந்த படத்தை இயக்க உள்ளார். சாக்‌ஷி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மனோதைரியத்தோடு நடந்து கொண்டதாகவும், இத்திரைப்படமும் மனோ தைரியம் மிகுந்த பெண் ஒருத்தியை பற்றியது என்பதால் இதில் நடிக்க சாக்‌ஷியை தேர்வு செய்ததாகவும் இயக்குநர் சத்யா தெரிவித்துள்ளார்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்துக்கு விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறிய அவர், இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவித்தார். முன்னதாக சாக்‌ஷி அகர்வால் காலா, ராஜா ராணி ஆகிய படங்களில் சிறிய வேடங்களிலும், சில மலையாளப்படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.