'பிகில்' ஸ்டைலில் வெறித்தனமாக ஃபுட்பால் ஆடி தெறிக்க விட்ட சாண்டி - வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 04, 2019 04:36 PM
டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் நடன அமைப்பில் சமீபத்தில் வெளியான 'சங்கத்தமிழன்' பாடலான 'கமலா' பாடல் மற்றும் 'கோமாளி' படத்தில் ஒளியும் ஒலியும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்றுவருகிறது.

சாண்டி சில நாட்களுக்கு முன் நடிகர் சிம்பு மற்றும் கலையுரசனுடன் ஃபுட் பால் மைதானத்தில் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்டிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அவர் தான் ஃபுட் பால் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சாண்டி, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அவரது வெகுளித்தனமான நடவடிக்கைகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். அங்கு கவினுடனான நட்பை அவர் கையாண்ட விதம் பார்வையாளர்களின் ஆதரவை அவருக்கு பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.