மகிழ்ச்சியை பகிர்ந்த நடிகர் கவின்... - வாழ்த்தும் ரசிகர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 10, 2019 09:03 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து நட்புனா என்னனு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது பிக்பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்ட அவர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் Behindwoods Gold Medal விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் கவினுக்கு Most popular person on television Bigg Boss 3 என்ற விருது நடிகர் ரோபோ சங்கர் கையால் வழங்கப்பட்டது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விருதின் ஃபோட்டோவை போஸ்ட் செய்துள்ளார். அதில், ஸ்கூல்ல கூட சில்வர், புரோன்ஸ் தான் வாங்கிருக்கேன். நன்றி Behindwoods என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Kavin, Behindwoods Gold Medal