' ரொம்ப Sorry' - பிக்பாஸில் இருந்து வெளியேறியவுடன் கவின் உருக்கமான பதிவு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 01, 2019 08:53 AM
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த கவின், கடந்த வாரம் பிக்பாஸ் அறிவித்த ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேறுவதாக அறிவித்தார். அவரின் இந்த போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியாக விளங்கியது.

இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 28) கமலுடன் மேடையேறிய கவின் சாண்டி மற்றும் லாஸ்லியாவுடன் உரையாடினார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுனு தெர்ல. இந்த நிகழ்ச்சியில் என்ன முயற்சி செய்தேனோ அத்தனையிலும் தோற்றேன்.
கடந்த இரண்டு வருடங்களாக என்ன இழந்தேனோ அதனை இந்நிகழ்ச்சியின் வாயிலாக பெற்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் தான் வந்தேன். நான் நேர்மறையான செயல்பாடுகளால் என்னால் முடிந்த வரை இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். நான் கொஞ்சம் பணத்தையும், இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பிரபலத்தன்மையும் எதிர்பார்த்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தேன்.
ஆனால் தற்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத சில விஷயங்களை பார்கக்கிறேன். அதனால் தற்போது கிடைத்த புகழை முழுமையாக என்னால் அனுபவிக்க முடியவில்லை. அதனால் நீங்கள் எனக்கு தொடர்ந்து அளித்து வரும் அன்பிற்கு முழுமையான நன்றி கூட என்னால் தெரிவிக்க முடியவில்லை. இப்பொழுது உங்களிடம் கிடைத்த அன்பிற்கு நான் கைமாறு செய்வதற்கு முன் என் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இது எல்லாத்தையும் விட நான் உணர்ந்தது இது ஒரு ரியாலிட்டி ஷோ. நான் என் உணர்வுகளுக்கு நேர்மையாக இருந்தேன். இது மற்றவர்களை காயப்படுத்திய என் செயலை நியாயப்படுத்தும் விதமாக அல்ல. என் தவறுகளை ஒத்து கொள்வது.
உங்களிடம் இருந்து கிடைத்த அன்பை ஏற்றுக்கொள்வதை போல சிலரிடம் இருந்து கிடைத்த வெறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து உங்களிடம் இருந்து கிடைக்க பெற்ற வெறுப்பை குறைக்க முயற்சி செய்வேன். ஒருவேளை உங்களை நான் காயப்படுத்தியிருந்தால் ரொம்ப Sorry. எப்பவும் போல கூட இருங்க, எல்லோரும் நல்லா இருப்போம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.