ஒரு ரசிகராகவும்,சகோதரனாகவும் காத்திருக்கிறேன்" - 'டாக்டர்' படம் குறித்து கவின் ட்வீட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Dec 03, 2019 10:49 AM
'நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படம் வரும் டிச.20ம் தேதி ரிலீசாகிறது

'இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கல்யாணியுடன் ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் கவின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், இறுதியாக சிவகார்த்திகேயன் அண்ணனும், நெல்சன் அண்ணனும் ஒன்றாக இணைந்து விட்டனர். ஒரு ரசிகராகவும்,சகோதரனாகவும் காத்திருக்கிறேன்" என்ற கேப்சனுடன் 'டாக்டர்' படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோவையும் கவின் பகிர்ந்துள்ளார்.