திருமணம் குறித்து வெளியான செய்திக்கு பிக் பாஸ் ரேஷ்மா விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷ்ணு விஷாலின் 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக காமெடி வேடத்தில் நடித்திருந்தவர் ரேஷ்மா.  அதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்த அவர், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

Bigg Boss 3 Reshma Pasupuleti Clarifies about Marriage rumours

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஷாந்த் ரவிந்திரன் என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், 'வாழ்க்கை மிகவும் சிறியது. அதனால் உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்பர்களுடன் வாழ்நாளை செலவிடுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் ரேஷ்மா மறுமணம் செய்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் நடிகை ரேஷ்மா இதற்கு தனது ட்விட்டர் பக்கம் மூலம் விளக்கமளித்துள்ளார். அதில், என் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகள் பொய்யானவை. என்னைப் பற்றிய பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள். நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.