Breaking: அமேசான் பிரைமில் அடுத்து அதிரடியாய் வெளியாகப்போகும் ரொமான்டிக் ஆக்சன் தமிழ் படம்
முகப்பு > சினிமா செய்திகள்'அருவம்' படத்துக்கு பிறகு சித்தார்த் ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'டக்கர்'. இந்த படத்தை 'கப்பல்' பட இயக்குநர் கார்த்திக் ஜி.கிருஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக திவ்யான்ஷா கௌசிக் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் நேரடியாக டிஜிட்டல் பிளாட்ஃபார்மான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்த தகவலின் அடிப்படையில் 'டக்கர்' படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ. 17.5 கோடிக்கு வாங்கியுள்ளதாம். இந்த படத்தினுடைய பட்ஜெட் ரூ. 16.5 கோடி என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் யோகி பாபு, அபிமன்யூ சிங், ஆர்ஜே விக்னேஷ், முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பாக இந்த படத்தை ஜெயராம் மற்றும் சுதன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் ரிலீஸ் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.