ஆபத்தான வீடியோ- காவல்துறையின் அலட்சியமான ஆக்‌ஷனை சுட்டிக்காட்டிய சித்தார்த்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் சித்தார்த் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். எந்த மாதிரியான விஷயங்களாக இருந்தாலும், தனது கருத்தினை பகிரங்கமாக பகிர்வது அவரது வழக்கம். அதுபோல இம்முறை மும்பை போலீஸில் பொறுப்பற்ற செயல் குறித்த ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.

Disturbing Video: Good Intentions, Irresponsible actions- Actor Siddarth responds to Mumbai Police

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல வித்தியாசமான யுக்திகளை கையாளும் முயற்சிகளில் மும்பை போலீஸ் ஈடுபடுவது வழக்கம். அப்படி, சமீபத்தில் மும்பை போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆபத்தான வீடியோ சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

மிகவும் பயங்கரமான செல்ஃபி எடுக்கணுமா? அல்லது பொறுப்பற்ற அட்வெஞ்சர் செய்யணுமா? இது எதுவா இருந்தாலும், ரிஸ்க் எடுக்க வேண்டாம். பாதுகாப்பு தான் முக்கியம் என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற நபர் தவறி கீழே விழும் படியான பயங்கரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மும்பை போலீஸ் பகிர்ந்திருந்தாலும், இத்தகைய ஆபத்தான வீடியோவை பகிரும் போது எவ்வித எச்சரிக்கையும் இன்றி பகிர்ந்தது, சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை சுட்டிக்காட்டி நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆபத்தான வீடியோ என்ற எச்சரிக்கையுடன் ஒரு நபர் உயிரிழக்கும் காட்சிகளை பகிர்ந்திருக்கலாம். நல்ல நோக்கம் என்றாலும், அலட்சியமான செயல் என மும்பை போலீஸ் குறித்து சித்தார்த் ட்வீட்டியுள்ளார்.