www.garudabazaar.com

"மக்களை ஏமாத்துறமோ!".. கோல்டன் மைக் கடிதம் டாஸ்க்.. மைண்ட் வாய்ஸை சத்தமாக பேசிய ஹவுஸ்மேட்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5.

priyanka niroop pavani confess day 99 biggboss vijay tv

BiggBossTamil5 இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியானது தற்போது, அதன் இறுதி வாரத்தை எட்டியுள்ளது. முன்னதாக இந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த சஞ்சீவ் மற்றும் அமீர் இருவரில் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி வெளியே சென்றார். பின்னர் 12 லட்சம் ரூபாய் பணத்தொகையுடன் வெளியேறினார். 

டிக்கெட் டூ ஃபினாலே

அதே நேரம், பிரபல விஜய் டிவி கோரியோகிராஃபரான அமீர், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற்று, நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கி, நாமினேஷன் இன்றி செல்கிறார். இதற்காக பிக்பாஸ் மட்டுமல்லாமல், வெளிசென்ற போட்டியாளர்கள், கமல்ஹாசன் என அனைவருமே அவரை பாராட்டினர்.

இதனிடையே அக்‌ஷரா மற்றும் வருண் இருவரும் வெளியேறியதில் இருந்தே தனிமையாக இருப்பதாக உணர்வதாக கூறிவந்த தாமரை, நிரூப் தனக்கு ஆறுதலாக இருப்பதாக கூறிவந்தார். ஆனால் தாமரையும் கடந்த வாரம் வெளியேறியுள்ளார். இந்நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுதத கட்டமாக 99வது நாட்களை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.

கோல்டன் மைக் கடிதம்

இந்நிலையில் தான்,  தற்போது கோல்டன் மைக் கடிதம் என்கிற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக யாரை தேர்ந்தெடுக்கப் போவது என்பது குறித்த இறுதி முடிவை எடுக்கப்போகும் மிக முக்கியமான வாரம் இது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த கோல்டன் மைக்கின் மூலம் நீங்கள் கடைசியாக ஒரு முறை மக்களிடம் பேசலாம்” என கூறப்பட்டது.

பாவனி, நிரூப் பேச்சு

இந்த டாஸ்க்கில் பாவனி கூறும்போது, “நான் மிகவும் நேர்மையாக விளையாடினேன்!” என கூறினார். நிரூப், “ஐயோ நான் மக்களை ஏதோ ஒரு இடத்தில் ஏமாற்றி விட்டோமோ. அதற்காக ஒரு பெரிய மன்னிப்பு கேட்கவேண்டும். உங்களிடம்!” என கூறினார்.

பிரியங்கா பேச்சு

இதேபோல் பிரியங்கா கூறும்போது, “என்னை அடுத்த அடுத்த நிலைக்கு உயர்த்தியது என்னுடைய கரியர்தான். மைக் பிடித்து நான் ஆங்கரிங் செய்வது. ஐ லவ் மை ஜாப். இந்த இடத்திற்கு நான் வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். எனக்கு உடனே இந்த இடம் கிடைக்கவில்லை. அதைத் தாண்டி நான் ஒரு போட்டியாளராக ஒரு நிகழ்ச்சியில் ஜெயிக்கணும்னு  ஆசைப்படுகிறேன். இந்த 100 நாள்ல பிரியங்காவை உங்களுக்கு புடிச்சிருந்தா ப்ளீஸ் ஓட்டு போடுங்க!” என அவர் கூறினார்.

Also Read: "விலகணும்னுதான் வெறுப்பா பேசுனேன்".. போட்டு உடைத்த நிரூப்.. பிரியங்காவிடம் மன்னிப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

priyanka niroop pavani confess day 99 biggboss vijay tv

People looking for online information on BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Niroop, Pavani, Priyanka will find this news story useful.