2020 ஜனவரி ரிலீஸுக்கு தயாரான சித்தார்த்தின் ‘டக்கர்’!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 23, 2019 02:01 PM
பிரபல நடிகர் சித்தார்த்தும், ‘கப்பல்’ பட இயக்குநர் கார்த்தி ஜி கிருஷ் ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ள ‘சைத்தான் கா பச்சா’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்த அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

‘டக்கர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், அதிரடி காட்சிகள் நிரம்பிய காதல் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ‘மஜிலி’ படத்தில் நடித்த திவ்யான்ஷா கெளசிக் நடித்துள்ளார்.
மேலும், அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து தயாரிக்கும் 'டக்கர்' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் 'டக்கர்' படத்துக்கு, வாஞ்சி நாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். கா.கெளதம் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் கார்த்தி ஜி.கிருஷ் கூறுகையில், ‘டக்கர்’ திரைப்படம் இறுதி வடிவத்திற்கு வரும்வரை எவ்வித செய்திகளையும் கசியவிட வேண்டாம் என படக்குழு ஒட்டு மொத்தமாக முடிவு செய்திருந்தோம். கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பைத் துவக்கி தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், “'சைத்தான் கா பச்சா' படத்தின் ஷூட்டிங்கின் போதே, ஒரு கதைக் கருவை சித்தார்த்திடம் சொன்னேன். உடனே அவர் இந்தக் கதைக் கருவை விரிவாக்கி முழுமையான ஸ்க்ரிப்படாக எழுதும்படி சொன்னார். எனது முதல் படைப்பான கப்பல் படத்தைத் தயாரித்த சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.