Breaking: பிரபல நடிகையுடன் இணைந்து ரொமான்டிக் பாடல் பாடும் சிம்பு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 26, 2019 07:33 PM
'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்துக்கு பிறகு நடிகர் சித்தார்த், 'கப்பல்' பட இயக்குநர் கார்த்தி ஜி கிருஷ் உடன் இணைந்துள்ள படம் 'டக்கர்'. இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக திவ்யான்ஷா கௌசிக் நடிக்கிறார். மேலும், அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சிம்பு முதன்முறையாக நடிகை ஆண்ட்ரியாவுடன் இணைந்து ரெயின்போ என்ற ரொமான்டிக் பாடலை பாடவிருக்கிறாராம்.