இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் கதாநாயகி மாற்றப்பட்டுள்ளார்.

இந்திய சினிமாவில் பயோபிக் எடுக்கும் டிரெண்ட் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது.
அமோல் குப்தே இயக்கி வரும் இப்படத்தை டி-சீரிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சாய்னா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்திற்காக ஷ்ரத்தா கபூர் பாட்மிண்டன் பயிற்சிகளும் மேற்கொண்டார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், இப்படத்தில் இருந்து நடிகை ஷ்ரத்தா கபூர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பதில் பெருமைக் கொள்வதாக நடிகை பரினீதி சோப்ரா தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, வரும் 2020-ன் முன்பாதியில் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
Truly, truly grateful!!! Thankyouu ❤️❤️ https://t.co/hJXLgiwO2A
— Parineeti Chopra (@ParineetiChopra) March 15, 2019