www.garudabazaar.com

“நவரசா Shootக்கு முன்னாடி சித்தார்த்துடன் zoom calls-ல ரிகர்சலா?”.. மனம்திறந்த நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பார்வதி திருவோத்து, மலையாளம், தமிழ் படங்களில் வித விதமான பாத்திரங்களில், மாறுபட்ட நடிப்பை வழங்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவிப்பவர்.

Parvathy Thiruvothu zoom call rehearsal with siddarth navarasa

இவர், நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் இன்மை பகுதியில் வித்தியாசமான பாத்திரத்தில், அட்டாகாசமான நடிப்பை வழங்கியுள்ளார். தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

இதில், ‘இன்மை’ உருவாக்கம் குறித்து நடிகை பார்வதி திருவோத்து கூறும்போது, “நடிகர் சித்தார்த் கண்களாலேயே பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறமை வாய்ந்தவர். அவருடன் இணைந்து நடித்தது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.

இப்படம் ஒரு அறுசுவை விருந்தாக இருந்தது. நடிகர் சித்தார்த் அவர்களும், நானும் படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்னர் zoom calls மூலம் ஆன்லைனில், சிலமுறை பேசி, இப்படம் குறித்து ரிகர்சல் செய்துகொண்டோம். இணையவெளியிலிருந்து அப்படியே படப்பிடிப்பிலும் அதே மாயம் நிகழந்தது அற்புதமாக இருந்தது. எவ்வித தடங்களுமின்றி, மிக எளிதாக இந்த படப்பிடிப்பு நிகழந்தேறியது.

முன்னணி கலைஞர்கள் பங்குபெற, அத்தனை பேரின் அர்ப்பணிப்பில், வெகு இயல்பாக, ஒரு அற்புத படைப்பு உருவாகியுள்ளது. திரைத்துறை நண்பர்கள் இணைந்து, தங்கள் சக தோழர்களின் நலனுக்கு இந்த ஆந்தாலஜி திரைப்படத்தினை உருவாக்கியுள்ளது மகிழ்ச்சி என்றார்.

மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு 9 வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படம் நவரசா. Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். "நவரசா" Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, 190 நாடுகளில் வெளியாகிறது.

ALSO READ: நவரசா-வில் சம்பவம் செய்ய காத்திருக்கும் வேறலெவல் ‘பெண் கதாபாத்திரங்கள்’ பத்தி தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Parvathy Thiruvothu zoom call rehearsal with siddarth navarasa

People looking for online information on Navarasa, Parvathy Thiruvothu, Siddharth will find this news story useful.