www.garudabazaar.com

"ஹாய்.. BIGG BOSS -ல இருந்து வந்தாச்சு" .. ராபர்ட் மாஸ்டர் வெளியிட்ட வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

Robert master first speaking video after Bigg Boss Elimination

Also Read | ஜெயிலர் ஷூட்டிங்கில் குடும்பத்துடன் ரஜினிகாந்தை சந்தித்த ROBO ஷங்கர்! பிண்ணனி தகவல்

இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.

Robert master first speaking video after Bigg Boss Elimination

பொம்மை டாஸ்க், அரசவை, அருங்காட்சியகம் டாஸ்க், கோர்ட் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருந்தது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள்  பங்கேற்றனர்.

Robert master first speaking video after Bigg Boss Elimination

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ராபர்ட் மாஸ்டரை அசல் கோலார் சந்தித்தார். மேலும் ராபர்ட் மாஸ்டரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சந்தித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன.

Robert master first speaking video after Bigg Boss Elimination

தற்போது ராபர்ட் மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டுள்ளார். அதில், "ஹாய் எல்லாருக்கும் வணக்கம். நான் ராபர்ட் மாஸ்டர் பேசுறேன். இப்போ பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தாச்சு. பிக்பாஸ் உள்ள இருக்கும் போது எனக்கு ஓட்டு போட்ட எல்லாருக்கும், என் ரசிகர்கள், நண்பர்கள், குட்டீஸ், அம்மா, அப்பா எல்லாரும் ஓட்டு போட்டுருக்கீங்க. உங்கள் ஆதரவுக்கு நன்றி!" என ராபர்ட் மாஸ்டர் வீடியோவில் கூறியுள்ளார்.

Also Read | மாணவர்களுடன் கபடி & கிரிக்கெட் ஆடி மாஸ் காட்டும் அமைச்சர் ரோஜா.. TRENDING

தொடர்புடைய இணைப்புகள்

Robert master first speaking video after Bigg Boss Elimination

People looking for online information on Bigg Boss Robert Master, Bigg Boss Tamil 6, Robert master, Vijay tv will find this news story useful.