www.garudabazaar.com

BIGGBOSS: சிறைக்கு செல்லும் குயின்ஸி & ராபர்ட்.. இது தான் காரணமா? பரபரப்பான வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

BIGGBOSS Tamil Season 6 Day 47 Robert master Queency

Also Read | மும்முரமாக நடைபெறும் லால் சலாம் பட வேலைகள்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த LATEST UPDATE..

இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது

பொம்மை டாஸ்க், அரசவை, அருங்காட்சியகம் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருந்தது.

BIGGBOSS Tamil Season 6 Day 47 Robert master Queency

அப்படி ஒரு சூழலில், இந்த வாராம் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. அனைத்து போட்டியாளர்களும் தங்களது குற்றங்களை வழக்காக முன் வைக்க, அதனை நீதிமன்றம் மூலம் வாதாடி, அந்த வழக்கில் தீர்ப்பை எட்ட வேண்டும்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள்  பங்கேற்றனர்.

BIGGBOSS Tamil Season 6 Day 47 Robert master Queency

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

BIGGBOSS Tamil Season 6 Day 47 Robert master Queency

இந்நிலையில் இன்றைய ப்ரோமோ இரண்டாவது வீடியோவில் இந்த வாரம் நடந்த நீதிமன்ற டாஸ்க் பற்றி போட்டியாளர்களிடம் பிக்பாஸ் கேட்டறிகிறார். மேலும் இந்த வார டாஸ்கில் சரியாக பங்கு கொள்ளாத நபர்கள் யார் என்று கேட்கிறார்.

அதற்கு போட்டியாளர்களில், ரச்சிதா பெயரை ராபர்ட், மணிகண்ட ராஜேஷ், விக்ரமன் ஆகியோர் முன் மொழிந்தனர். ராபர்ட் பெயரை, ராம், ஆயிஷா, அமுதவாணன், ரச்சிதா ஆகியோர் முன் மொழிந்தனர். குயின்ஸி பெயரை விக்ரமன், ரச்சிதா கதிரவன், அசீம் ஆகியோர் முன் மொழிந்தனர். இறுதியில் ராபர்ட் & குயின்ஸி சிறைக்கு அனுப்பப்படுவதாக பிக்பாஸ் அறிவிப்போடு ப்ரோமோ வீடியோ காட்சிகள் நிறைவடைகிறது.

Also Read | பாகுபலி வசூலை முறியடித்த RRR.. ஜப்பானில் மட்டும் இத்தனை கோடி வசூலா! மாஸ் சம்பவம்

தொடர்புடைய இணைப்புகள்

BIGGBOSS Tamil Season 6 Day 47 Robert master Queency

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Queency, Vijay Television, Vijay tv will find this news story useful.