"நீங்க நார்மலா பேசுங்க".. ஒருவழியா ராபர்ட் மாஸ்டரிடம் போட்டு உடைத்த ரச்சிதா.. ரிசல்ட் என்ன.?
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டரை அழைத்து ரச்சிதா பேசி இருந்த விஷயங்கள் தற்போது பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | புதிய படத்தில் கார்த்திக்கு ஜோடியான பிரபல முன்னணி நடிகை! வெளிவந்த சூப்பர் அப்டேட்!
கடந்த ஒரு மாதமாக தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விறுவிறுப்பான சம்பவங்கள் அல்லது போட்டியாளர்கள் இடையே நடக்கும் உரையாடல்கள் என ஒரு விஷயம் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி கொண்டே தான் இருக்கிறது.
அதிலும், பிக்பாஸ் ஆரம்பமானது முதலே ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா ஆகியோரிடையே நடைபெறும் உரையாடல்கள் உள்ளிட்ட விஷயங்கள் அதிக அளவில் கவனம் பெறும். இதனிடையே, சமீபத்தில் ராபர்ட் மாஸ்டர் கிச்சன் ஏரியாவிலேயே சுற்றி வருவதை குறிப்பிட்டு தனலட்சுமி சில கருத்துக்களை பேசி இருந்தார். இதனை ரச்சிதாவும் வழிமொழிய ராபர்ட் மாஸ்டர் அப்செட் ஆனதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, ராபர்ட் மாஸ்டரிடம் அறிவுரையும் சொல்லி இருந்தார் ஷிவின். மறுபக்கம், நான் நார்மலாக தான் இருக்கிறேன் என்றும், ஆனால் ராபர்ட் மாஸ்டர் ஒரு குழந்தை மாதிரி செய்வதாகவும் ஷிவினிடம் தெரிவிக்கிறார் ரச்சிதா. அப்படி ஒரு சூழலில் இது பற்றி நேரடியாகவே ராபர்ட் மாஸ்டரிடம் பேச முடிவு செய்கிறார் ரச்சிதா.
"ஏன் இப்படி அப்நார்மலாக நடந்து கொள்கிறீர்கள்?. நார்மலாக இருங்களேன். நீங்க என்ன எவ்வளவு கலாய்க்குறீங்க, பதிலுக்கு நான் ஒன்னும் சொல்ல கூடாதா?. ஏன் இப்படி இருக்கீங்க. நீங்க பண்றது குழந்தைத்தனமா இருக்கு. உங்களுக்கு அது தெரியுதா?. எதோ எதிரி மாதிரி Behave பண்றீங்க. எதிர்ல் இருக்கிறவங்களுக்கு எப்படி இருக்கும்ன்னு தெரியுமா?. நீங்க நார்மலா இருங்க" என ரச்சிதா சொல்கிறார்.
"புடிச்சவங்ககிட்ட எப்படி நார்மலா இருக்குறது?" என ராபர்ட் மாஸ்டர் சொல்ல, "எனக்கும் நிறைய பேரை பிடிக்கும். நான் நார்மலா இருக்க மாட்டேனா?" என்று ரச்சிதா சொல்கிறார். தொடர்ந்து, ராபர்ட் மாஸ்டரும், "அது வேற இது வேற" என பதில் சொல்கிறார். "ஏன் மாஸ்டர், ஏன் இப்டி" என்றபடி தன்னை அடிக்கடி ராபர்ட் மாஸ்டர் கலாய்ப்பதை பற்றியும் ரச்சிதா குறிப்பிடுகிறார். ஆனால், இந்த ஒரு மாதத்தில் ரச்சிதாவை கலாய்த்ததே இல்லை என்றும் ராபர்ட் சொல்ல, மூக்குத்தி என தன்னை அழைத்தது உள்ளிட்ட விஷயங்களை ரச்சிதா நினைவு கூருகிறார்.
"இந்த வீட்டில் நீங்கள் ஒரு Vibe. நீங்கள் ஒரு மாதிரி ஆகி விட்டாலே எல்லாரும் திரும்பி என் பக்கம் பார்ப்பார்கள். அது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். நான் ஏதோ உங்கள பண்றேனோன்னு தான் தோணும். நீங்க நார்மலா இருங்க என்கிட்ட, அவ்ளோ தான் எனக்கு, புரியுதுல்ல" என ரச்சிதா முழுமையாக எடுத்துரைக்கிறார்.
இதன் பின்னர் ராபர்ட் மாஸ்டர் அங்கிருந்து எழுந்து போகும் போது 'Thank you, லவ் யூ' என சொல்கிறார். இதனை கேட்டதும் ரச்சிதா முகம் மாற, "இது எப்பவும் சொல்றது தான், எல்லார்கிட்டயும். டார்லிங் சொல்லுவோம்ல. அந்த மாதிரி. அது பேரு பாசம், வேஷம் இல்ல" என்கிறார் ராபர்ட் மாஸ்டர்.
Also Read | கார்த்தி & ராஜூ முருகன் இணையும் புதிய படம்.. பூஜை அன்றே வெளியான படத்தின் தலைப்பு!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg Boss 6 Tamil Sherina Eliminated Kamalhaasan Announced
- Vikraman Holds Sherina In Trp Task Bigg Boss 6 Tamil
- Rachitha Enjoying In Rain Robert Scolded Her Bigg Boss 6 Tamil
- Myna Cried After Argument With Azeem Bigg Boss 6 Tamil
- Janany Queency Towel Issue Queency Cries Bigg Boss 6 Tamil
- Bigg Boss Tamil Season 6 Day 26 Dhanalakshmi Ram Conversation
- Janany Cried Funnily Dhanalakshmi Manage Bigg Boss 6 Tamil
- Janany Queency Towel Fight Bigg Boss 6 Tamil
- Bigg Boss 6 Tamil Azeem Maheswari Fight In Tv Task
- Dhanalakshmi Rain Dance After Fight With Azeem Bigg Boss 6 Tamil
- Again Dhanalakshmi Azeem Fight After Tv Task Bigg Boss 6 Tamil
- Couldnt Eat Nivashini About Asal Elimination Bigg Boss 6 Tamil
தொடர்புடைய இணைப்புகள்
- IND VS ZIM MATCH GROUND ல பார்க்க லுங்கி DANCE ஆடிய PUGAZH 😂 அநியாயம் பண்றீங்க BRO 🤣
- 🔴 இன்னைக்கு BB Elimination யாரு? BIGG BOSS மக்கள் கருத்து
- "Thank You Sir"...Kamal முன்னாடியே Rachitha-விடம் Open-ஆ கேட்ட Robert Master
- "VIKRAMAN-கிட்ட MYNA காமிக்கிற Body Language எல்லாருக்கும் கோபம் தான் வரும்"... BB Day 27 Highlights
- SHERIINA OUT?🧧மக்களே காப்பாத்துவாங்க! பொண்ணை நெனச்சு தூங்காம விடிய விடிய அழுகுறோம் Parents Interview
- 🔴LIVE: "கும்முனு அழகா இருக்க Ratchitha.." 😍 அடி Confirm 😱 தோலுரிக்கும் Fatman Review BB Day 26
- 🔴LIVE: "ஐய்யோ Vikraman" 🚨AMBULANCE-அ கூப்பிடுங்க! 😭 தோலுரிக்கும் Fatman Review BB Day 25
- யோவ்🤬 கடுப்பில் Aadhavan-ஐ இறங்க சொன்ன Nisha🙄 நகைச்சுவையில் நடந்த கலவரம்😜
- Venkatesh Bhat Vs Wife🥊LIVE FIGHT😍Interview-லயே செம்ம அடி அடிக்குறாரு🤣1st Ever Family Interview❤️
- யார்கிட்டயும் Love-ல விழ மாட்டான் ❤️ அவன் Field-ல நிறைய Girls இருக்காங்க.. 🙂 Ram Family Interview
- 🔴LIVE: "அடங்கி போ… கம்முனு படு!! கேக்குதா காது?" 😡 தோலுரிக்கும் Fatman Review BB Day 24
- "அவர் பேசுறது எல்லாம் மத்தவங்க இதயத்தையே உடைக்குற மாதிரி இருக்குது"💔... Azeem குறித்து பேசிய Asal