www.garudabazaar.com

"இந்த நரிக் கூட்டத்துல வாழ்றதோட".. கேமரா முன்னாடி ராபர்ட் மாஸ்டர் சொன்ன பரபரப்பு விஷயம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன் ஒவ்வொரு நாளும் பல்வேறு திருப்புமுனைகளுடன் தான் சென்று கொண்டிருக்கிறது.

robert master request people after nominate in biggboss house

Also Read | "Top டூ Bottom முழுக்க கோல்டு தான்".. வித்தியாசமான கெட் அப்பில் கார்த்தி.. Japan First Look!!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதமான நிலையில், ஏகப்பட்ட சண்டைகள் மற்றும் அதே வேளையில் கலகலப்பான விஷயங்கள் கூட அவ்வப்போதும் அரங்கேறி வருகிறது.

இதற்கு மத்தியில், டாஸ்க் என வந்து விட்டால் நிச்சயம் போட்டியாளர்கள் மத்தியில் மாறி மாறி களேபரங்கள் தான் நடைபெறும்.

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க் உள்ளிட்ட இரண்டு டாஸ்க்குகள் காரணமாக கடந்த சில எபிசோடுகளில் பல போட்டியாளர்கள் மத்தியில் சண்டை வெடித்திருந்தது. இதன் காரணமாக உருவான பல பிரச்சனைகளுக்கு வார இறுதியில் வந்த கமல்ஹாசன் விடை அளித்திருந்தார். இதற்கு மத்தியில், ஜிபி முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என அங்கிருந்து இரண்டாவது வாரம் கிளம்பி விட்டார்.

robert master request people after nominate in biggboss house

இதற்கடுத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தனர். இதன் பின்னர், கடைசியாக சமீபத்தில் மகேஸ்வரியும் எலிமினேட் செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, வெளியே வந்த மகேஸ்வரி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த வீடியோவும் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.

தொடர்ந்து, தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் மீண்டும் தங்களின் ஸ்டைலில் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் யார் உள்ளார்கள் என்பது குறித்தும் பிக்பாஸ் அறிவித்துள்ளது.

robert master request people after nominate in biggboss house

அனைத்து போட்டியாளர்களும் இரண்டு பேரை நாமினேட் செய்த பின், கடைசியில் அறிவிக்கப்பட்ட எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில், அசீம், ஆயிஷா, தனலட்சுமி, கதிரவன், குயின்சி, நிவாஷினி, ராபர்ட், கதிரவன் மற்றும் ஜனனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அப்படி ஒரு சூழலில், கேமராவை பார்த்து ராபர்ட் மாஸ்டர் பேசிய விஷயங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

robert master request people after nominate in biggboss house

அப்போது பேசும் ராபர்ட் மாஸ்டர், "இந்த நரிக் கூட்டத்தோட வாழுறதுக்கு வெளிய வந்து வாழலாம். இத வந்து மக்களுக்கு சொல்றேன். இவங்க வேணாம்ன்னு சொல்லி வெளிய அனுப்புறாங்க. நமக்கு வெளிய நிறைய வேலை இருக்கு. தயவு செஞ்சு காப்பாத்திடாதீங்க. லவ் யூ" என கூறி உள்ளார்.

நாமினேஷன் பட்டியலில் ராபர்ட் மாஸ்டர் இடம்பெற்றுள்ள நிலையில், தன்னை காப்பாற்ற வேண்டாம் என கேமரா முன்பு அவர் பேசியுள்ள விஷயம், பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது .

Also Read | அதர்வா - ராஜ்கிரண் நடிப்பில் உருவாகும் பட்டத்து அரசன்.. லைகா அறிவித்த ரிலீஸ் தேதி!!

தொடர்புடைய இணைப்புகள்

robert master request people after nominate in biggboss house

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Biggboss House, BIGGBOSS TAMIL, Rachitha, Robert will find this news story useful.