www.garudabazaar.com

"ஆனா சர்ப்ரைஸ்னு ஒன்னு பண்ண பாரு".. புகழ் பிறந்தநாளுக்கு பென்ஸி கொடுத்த கிஃப்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி புகழ் பிறந்தநாளில் மனைவி பென்ஸி கொடுத்த கிஃப்ட் கொடுத்துள்ளார்.

Bensi Gift Surprise Gift for Vijay TV Pugazh Birthday

Also Read | "இதுக்கு கதிரவன் தான் கரெக்ட்டு".. ரகசிய பிளான் போடும் அசீம், ரச்சிதா.. இனி ரகளைகள் தான்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அந்த நிகழ்ச்சிக்கு ஏகோபித்த வரவேற்பு இருந்தது.

அதில் நடித்த அஸ்வின்,பவித்ரா, ஷிவாங்கி, புகழ், தர்ஷா, பாலா, பாபா பாஸ்கர், ரித்திகா என அனைவருக்கும் அவர்களுக்கென்ற தனித்த ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

புகழ் மற்றும் ஷிவாங்கி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். குறிப்பாக புகழ் நடிப்பில் வலிமை, சபாபதி, என்ன சொல்லப் போகிறாய், எதற்கும் துணிந்தவன், யானை ஆகிய படங்கள்  இந்த ஆண்டு ரிலீஸ் ஆகின.

Bensi Gift Surprise Gift for Vijay TV Pugazh Birthday

முன்னதாக 2016-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியில் பிரபலமான புகழ், தொடக்கத்தில் பெண் வேடமிட்டு பல நகைச்சுவை கான்செப்ட்களில் நடித்து வந்தார்.

தற்போது ஜூ கீப்பர் என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வரும் புகழ், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதுடன், அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார். 

Bensi Gift Surprise Gift for Vijay TV Pugazh Birthday

இதனிடையே, புகழ் பென்ஸி என்கிற பெண்ணை 5 வருடங்களாக காதலித்து சில நாட்களுக்கு முன் திருமணம் செய்தார்.

இந்து முறைப்படியும், பென்ஸியா இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் இஸ்லாமிய முறைப்படியும் புகழ் திருமணம் செய்துகொண்டார்.

அவ்வப்போது தனது மனைவியுடன் சுற்றுலா மற்றும் கொண்டாட்ட வீடியோ & புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் புகழ்.

Bensi Gift Surprise Gift for Vijay TV Pugazh Birthday

இந்நிலையில் புகழ் கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் மனைவி பென்ஸி அளித்த பரிசு பற்றி புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "மிக்க நன்றி பொண்டாட்டி, ஆனா சர்ப்ரைஸ்னு ஒன்னு பண்ண பாரு தங்கம் வேறலெவல். சர்ப்ரைஸ் நல்லா தான் இருந்துச்சு!" என புகழ் பதிவிட்டுள்ளார்.

Also Read | "சில பதிவுகள் உண்மை.. ஆனா".. சர்ச்சையான பழைய பதிவுகள் ‌.. Love Today பிரதீப் பரபரப்பு விளக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Bensi Gift Surprise Gift for Vijay TV Pugazh Birthday

People looking for online information on Bensi, Pugazh, Pugazh Birthday, Vijay Tv Pugazh will find this news story useful.