www.garudabazaar.com

மாணவர்களுடன் கபடி & கிரிக்கெட் ஆடி மாஸ் காட்டும் அமைச்சர் ரோஜா.. TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா மாணவர்களுடன் கபடி, கிரிக்கெட் & வாலிபால் ஆடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Minister RK Roja Played Cricket and Kabaddi

Also Read | துணிவு படத்தின் மூன்றாவது போஸ்டர்.. வைரலாகும் அஜித்தின் ஸ்டைலான தெறி லுக்!

90 களில் பிரபலமான நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ரோஜா.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் ஜோடியாக 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரோஜா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர்.

Minister RK Roja Played Cricket and Kabaddi

இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனையடுத்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை நடிகர் ரோஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாகவும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

Minister RK Roja Played Cricket and Kabaddi

ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.கே.ரோஜா, சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி தொகுதியில்  நடைபெற்ற ஜெகன்னா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாணவர்களுடன் கபடி, கிரிக்கெட், வாலிபால் விளையாடினார். இதில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக  பங்கேற்றார்.  மேலும் சித்தூர் மக்களவை உறுப்பினர் ரெட்டிப்பாவும் கலந்து கொண்டார்.

Minister RK Roja Played Cricket and Kabaddi

சில நாட்களுக்கு முன்பு, ரோஜா அறக்கட்டளையின் கீழ், தனது சொந்த தொகுதியான நகரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளையும் எம்எல்ஏ ரோஜா திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

Minister RK Roja Played Cricket and Kabaddi

மேலும் வடமலைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது சகோதரர் ராம்பிரசாத்துடன் கைப்பந்து போட்டிகளையும் ரோஜா துவங்கி வைத்தார்.

Also Read | ஜெயிலர் ஷூட்டிங்கில் குடும்பத்துடன் ரஜினிகாந்தை சந்தித்த ROBO ஷங்கர்! பிண்ணனி தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Minister RK Roja Played Cricket and Kabaddi

People looking for online information on Kabaddi, Minister RK Roja, Roja, Roja Played Cricket will find this news story useful.