www.garudabazaar.com

கமல்ஹாசன் பின்னாடி இருந்துட்டு.. Vijay Tv புகழ் செஞ்ச விஷயம்.. இணையத்தில் வைரலாகும் பின்னணி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

DSP படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பின்னால் இருந்து புகழ் செய்த விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Vijay tv pugazh worship kamalhaasan in dsp movie trailer launch

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 46 வது திரைப்படமாக உருவாகி உள்ளது 'DSP'.

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கியது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முடிந்து படம் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.

Vijay tv pugazh worship kamalhaasan in dsp movie trailer launch

'DSP' படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் அனு க்ரீத்தி, இளவரசு, ஞான சம்பந்தன், புகழ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். DSP இடத்தின் ட்ரைலரும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில், ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்றும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், "என்னைப் போலவே விஜய் சேதுபதி சினிமா நேசர்... நான் மார்லன் பிராண்டோ முன்பு மண்டியிட்டு அவரது கையில் முத்தமிடுவேன். அப்படித்தான் இன்று விஜய்சேதுபதி என் முன் காலில் விழுந்தார். நாளை விஜய் சேதுபதி முன்பு காலில் விழ வேறொரு கலைஞன் வருவான்" என பேசியுள்ளார்.

DSP நிகழ்ச்சி மேடையில் கமல்ஹாசன் பேசி இருந்த விஷயங்கள் அதிகம் வைரலாகி இருந்தது. இந்த நிலையில், DSP படத்தில் நடித்துள்ள விஜய் டிவி புகழ், கமல்ஹாசன் இருக்கையின் பின்னால் அமர்ந்து செய்த விஷயம், தற்போது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Vijay tv pugazh worship kamalhaasan in dsp movie trailer launch

விஜய் டிவி நிகழ்ச்சிகளான அது இது எது, குக் வித் கோமாளி உள்ளிட்டவை மூலம் அதிக பிரபலம் அடைந்தவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் கோமாளியாக தோன்றி இருந்த புகழ், திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

Vijay tv pugazh worship kamalhaasan in dsp movie trailer launch

சபாபதி, வலிமை, ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள புகழ், தற்போது DSP திரைப்படத்திலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து இதன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசனின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார் புகழ். அப்போது, கமல்ஹாசனுக்கு தெரியாமல் அவரை வணங்குவது போன்றும் செய்து காட்டுகிறார். இதனை அருகே இருந்தவர்கள் கவனிக்க உலக நாயகனை புகழ் வணங்கும் வீடியோக்கள், அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv pugazh worship kamalhaasan in dsp movie trailer launch

People looking for online information on DSP, Kamal Haasan, Pugazh, Vijay Sethupathi will find this news story useful.