www.garudabazaar.com

"இது விஷம்.. இது மருந்துனு தெளிவுபடுத்துற பாடம் பகாசூரன்..".. - RK செல்வமணி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ருத்ர தாண்டவம் திரைப்படத்தை தொடர்ந்து மோகன்.G இயக்கத்தில் உருவாகி, சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பகாசூரன்'. இந்த திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

RK Selvamani appreciate Mohan G Bakasuran movie

Also Read | "மாப்ள நல்லா இருக்கியா, இந்தா வரேன்னு சொல்லிட்டு".. மயில்சாமி மறைவால் கலங்கிய நட்டி!!

இவர்களுடன் ராதாரவி, K.ராஜன், தாராக்ஷி, ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். பகாசூரன் திரைப்படம், கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றி இருந்தார்.

RK Selvamani appreciate Mohan G Bakasuran movie

Images are subject to © copyright to their respective owners.

பகாசூரன் திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வரும் சூழலில், ஏராளமான சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் மற்றும் பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி, பகாசூரன் படத்தை பார்த்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். "நாங்க ஒரு பெற்றோரா பெண் குழந்தையோட தந்தையா அந்த படத்தை பார்க்கும் போது ஒரு மிகப்பெரிய விஷயத்தை சொல்ல வந்ததா தான் நாங்க உணர்றோம். முன்னாடி வந்து ஒரு குழந்தை வீட்டுக்குள்ள இருந்தா பாதுகாப்பா இருக்கு, வெளிய எங்கயாவது காணாம போய்ட்டா தான் ஒரு தாய், தந்தையர் குழந்தையை காணலன்னு பயப்படனும். ஆனா இன்னைக்கு ஒரு குழந்தை வீட்டுக்குள்ள கதவை பூட்டிட்டு இருந்தாலே நம்ம பயப்படக்கூடிய சூழ்நிலை வந்துருச்சு.

பெண் குழந்தைகள் எதையும் தாய், தந்தையர்கிட்ட ஷேர் பண்ணிக்கிற ஒரு சூழ்நிலையை தான் நம்ம உருவாக்கணும். அவங்க தப்பே பண்ணிருந்தா கூட நம்ம தப்பை அப்பா, அம்மாகிட்ட சொல்லலாம் அப்படிங்குற ஒரு தைரியத்தை குழந்தைங்ககிட்ட கொடுக்கணும். இல்லைன்னா மிகப்பெரிய ஒரு ஆபத்தை சமூகம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில இருக்கு.

RK Selvamani appreciate Mohan G Bakasuran movie

Images are subject to © copyright to their respective owners.

இந்த சமுதாயத்தில் வீட்டுக்குள்ள, சாலையில, கல்விக்கூடத்தில், பள்ளிக்கூடத்தில், வேலை செய்ற இடத்துலன்னு அனைத்து இடத்திலும் இந்த வில்லன்கள் (செல்போன்) நிறைஞ்சிருக்காங்க. என் கையிலே நான் அதை வச்சிருக்கேன். இது இல்லாம என்னால எந்த வேலையும் செய்ய முடியாது. அப்போ விஷத்தையும், மருந்தையும் ஒரே நேரத்துல நம்ம குழந்தைங்களுக்கு கொடுக்குறோம். இது விஷம், இது மருந்து என்று தெளிவா நம்ம குழந்தைக்கு நாம கொடுக்கணும். ஒருவேளை தெரியாம விஷத்தை எடுத்துட்டாலும், அவங்க வந்து மாட்டிக்கிட்டா அவங்க பயப்படாம என்ன பண்ணலாம் அப்படின்னு நம்மகிட்ட வந்து சொல்லணும். அந்த தைரியத்தை நம்ம உருவாக்கணும். இதுதான் இந்த படம் வந்து மத்தவங்களுக்கு கொடுக்கக்கூடிய பாடம்.

இந்தியாவில் உள்ள 40 கோடி பெற்றோர்களுக்கு பொதுவாக உள்ள விஷயத்தை தான் இந்த படத்துல மோகன் ஜி எடுத்திருக்கிறார். செல்வராகவன் அழகா பண்ணி இருக்காரு. ஒரு டைரக்டரா நிறைய படம் பண்ணி இருக்காரு, ஒரு கூத்தாடியா இந்த படத்துல சிறப்பா நடிச்சு இருக்காரு. கே ராஜன் அப்பப்ப வந்து போறாரு. ஆனாலும் ஒரு சிறப்பான நடிகன்ங்குறத இந்த படத்துல ப்ரூவ் பண்ணி இருக்காரு. என் நண்பன் நட்டியும் அற்புதமா நடிச்சிருக்காரு" என ஆர். கே. செல்வமணி கூறி உள்ளார்.

அதே போல இந்த திரைப்படத்தை அனைத்து பெற்றோர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் தனது கோரிக்கையையும் ஆர்.கே. செல்வமணி வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | Andrea Jeremiah : நாய்கள் வேட்டையாடும் கதைக்களம்.. புதிய சயின்ஸ் பிக்ஷன் படமாக இருக்குமா "நோ எண்ட்ரி"?

தொடர்புடைய இணைப்புகள்

RK Selvamani appreciate Mohan G Bakasuran movie

People looking for online information on Bakasuran, Mohan g, Rk selvamani, RK Selvamani appreciate Bakasuran movie will find this news story useful.