www.garudabazaar.com

"ஒரு படத்தை இயக்க என்னோட சம்பளம் 'இவ்வளவு' தான்! வருமான வரி கட்றோம்ல".. மோகன் ஜி EXCLUSIVE தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தன்னுடைய சம்பளம் குறித்து பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

Director Mohan G About His Salary for Directing Films

Also Read | இந்த Scene BEASTல இருந்திருக்கலாம்.. பூஜா ஹெக்டே பகிர்ந்த வீடியோ! அப்படி என்ன Scene?

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மோகன்.G இந்த படத்தினை இயக்கி உள்ளார்.  

ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் "பகாசூரன்" படத்தை தயாரித்து உள்ளது. இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

Director Mohan G About His Salary for Directing Films

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரா தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார். நாளை பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

Director Mohan G About His Salary for Directing Films

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு இயக்குனர் மோகன் ஜி பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவருடைய சம்பளம் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். தமது வீடு குறித்தும் அதை புணரமைப்பு செய்ய 3 கோடி செலவாகும் என்றும் மோகன்ஜி குறிப்பிட்டார். அப்போது நெறியாளர் பதில் கேள்வியாக "அடுத்த படத்தில் இதை சம்பளமாக வாங்கிடலாம்" என கூறுகிறார்.

Director Mohan G About His Salary for Directing Films

உடனே மறுத்த இயக்குனர் மோகன் ஜி, "பெரிய ஹூரோ நடிச்சா தான் அவ்வளவு சம்பளம் வரும். இந்த படங்களில் ஒரு படத்துக்கு 30-35 லட்சம் வரை சம்பளமாக வரும்". என பதில் அளித்தார்."பரவாயில்லை இவ்வளவு ஓபனா சொல்றீங்களே" என நெறியாளர் கூற, உடனே மோகன் ஜி, "அதான் வருமான வரி கட்றோம்ல" என பதில் அளித்தார்.

Also Read | மனைவிக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பால சரவணன்.. விலை மட்டும் இம்புட்டா? இவ்வளவு ஸ்பெஷலா!

"ஒரு படத்தை இயக்க என்னோட சம்பளம் 'இவ்வளவு' தான்! வருமான வரி கட்றோம்ல".. மோகன் ஜி EXCLUSIVE தகவல்! வீடியோ

Tags : Mohan g

தொடர்புடைய இணைப்புகள்

Director Mohan G About His Salary for Directing Films

People looking for online information on Mohan g will find this news story useful.