www.garudabazaar.com

Andrea Jeremiah : நாய்கள் வேட்டையாடும் கதைக்களம்.. புதிய சயின்ஸ் பிக்ஷன் படமாக இருக்குமா "நோ எண்ட்ரி"?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜம்போ சினிமாஸ்  நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் A. ஸ்ரீதர் தயாரிக்க, R.அழகு கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், வித்தியாசமான சயின்ஸ் பிக்சன் சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “நோ எண்ட்ரி”.

Andrea Jeremiah next movie No Entry trailer released

Images are subject to © copyright to their respective owners.

Also Read | மயில்சாமி வீட்டு வாசலில் உள்ள வாசகம்.. "அதுல இருந்தது மாதிரியே வாழ்ந்துட்டு போய்ட்டாரு"

இந்த திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். இவர்களுடன் பிரதாப் போத்தன், ஆதவ் கண்ணதாசன், ரன்யா ராவ் ஆதவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜீஸ் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Andrea Jeremiah next movie No Entry trailer released

Images are subject to © copyright to their respective owners.

ஒரு காட்டுக்குள் ராணுவத்திற்காக ஆராய்ச்சி செய்யப்போன தன் தந்தையை தேடி போகிறார் ஆண்ட்ரியா. அதே போல் வேறு வேறு காரணங்களுக்காக டூரிஸ்டாகவும் சிலர் அந்தக் காட்டுக்குள் வருகின்றனர். அங்கே மரபணு மாற்றப்பட்ட அதிசக்தி வாய்ந்த அழிக்க முடியாத நாய்களிடம் அவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த நாய்களின் வேட்டையில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறியதா என்பதே “நோ எண்ட்ரி” படத்தின் கதை.

Andrea Jeremiah next movie No Entry trailer released

Images are subject to © copyright to their respective owners.

தமிழில் அரிதாக நிகழும் சயின்ஸ் பிக்சன் வகையில் புதுமையான திரைக்கதையில் அனைவரையும் ஈர்க்கும் கமர்ஷியல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. படக்குழுவினர் இதுவரை எந்த தமிழ்ப்படமும் படமாக்கப்படாத மேகாலயாவின் சிரபுஞ்சி காடுகளில் இப்படத்தினை படமாக்கியுள்ளனர். அதிக மழைப்பொழிவும் இருட்டும் சூழ்ந்த காடுகளில் கடும் உழைப்பை கொட்டி படத்தை உருவாக்கி உள்ளனர். பயிற்சி அளிக்கப்பட்ட உயர்வகை நாய்கள் இப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வழங்கியுள்ளன.

Andrea Jeremiah next movie No Entry trailer released

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல சற்று வித்தியாசமான திரைக்களமாகவும் இருப்பது நோ எண்ட்ரி படத்தின் ட்ரைலர் மூலம் தெரிய வருகிறது.

Also Read | "மாப்ள நல்லா இருக்கியா, இந்தா வரேன்னு சொல்லிட்டு".. மயில்சாமி மறைவால் கலங்கிய நட்டி!!

தொடர்புடைய இணைப்புகள்

Andrea Jeremiah next movie No Entry trailer released

People looking for online information on Andrea Jeremiah, Andrea Jeremiah next movie update, No Entry trailer will find this news story useful.