www.garudabazaar.com

"7G-ல ஏன் அப்படி ஒரு சீன் வெச்சீங்க.. பாவம்ல".. மோகன் G மகள் கேள்வி.. ஷாக் ஆன செல்வராகவன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் மோகன் ஜி. இந்த படத்தை தொடர்ந்து, திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட திரைப்படங்களையும் அவர் இயக்கி இருந்தார்.

Mohan G daughter question to director selvaraghavan about movies

Images are subject to © copyright to their respective owners

மோகன் ஜி இயக்கும் திரைப்படங்கள் குறித்து ஏரளமான கருத்துக்கள் பரவலாக இருந்து வரும். சூழலில் அவை அனைத்திற்கும் தனது விளக்கங்களையும் மோகன் ஜி கொடுத்து வந்துள்ளார்.

ருத்ர தாண்டவம் படத்திற்கு பிறகு மோகன் ஜி இயக்கத்தில் உருவான பகாசுரன் திரைப்படம், தற்போது திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் செல்வராகவன் மற்றும் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதாரவி, K.ராஜன், தாராக்ஷி, ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி, சசி லையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் "பகாசூரன்" படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு இயக்குனர் மோகன் ஜி, அவரது மனைவி ஆகியோர் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இதில், அவர்களின் மகளும் உடன் இருந்தார். இந்த பேட்டியில், தனது திரை பயணம் குறித்தும், தனது படங்கள் மீது வரும் விமர்சனங்கள் குறித்தும் நிறைய கருத்துக்களை மோகன் ஜி பகிர்ந்து கொண்டார்.

Mohan G daughter question to director selvaraghavan about movies

அதே போல, கணவர் இயக்கும் திரைப்படங்கள் குறித்து மோகன் ஜி மனைவியும் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அவரது திரை பயணத்தில் ஒரு மனைவியாக தான் ஆற்றி வரும் பங்கு குறித்தும் நெகிழ்ச்சியாக பேசி இருந்தார் மோகன் ஜி மனைவி.

இதற்கு மத்தியில், அவர்களின் மகளும் சில திரைப்படங்கள் பற்றி பேசி இருந்தார். தனக்கு பிடித்த திரைப்படம் "ஜெய் பீம்" என மோகன் ஜி மகள் கூறி இருந்த சூழலில், தந்தை இயக்கிய இரண்டு படங்களும் தனக்கு பிடிக்கும் என்று கூறியிருந்தார். அதே போல, பகாசுரன் சூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் செல்வராகவனுடன் மோகன் ஜி மகள் பேசியிருந்த சில விஷயங்கள் பற்றியும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

Mohan G daughter question to director selvaraghavan about movies

மோகன் ஜி மற்றும் அவரது மனைவி ஆகியோர் பகிர்ந்து கொண்ட தகவல்களின் படி செல்வராகவன் இயக்கியிருந்த 7 G ரெயின்போ காலனி படத்தில் வரும் கனா காணும் காலங்கள் என்ற பாடலை பயிற்சி எடுத்து அவரிடம் பாடி உள்ளதாக குறிப்பிட்டனர்.

அதே போல, செல்வராகவன் இயக்கிய திரைப்படங்கள் குறித்து யூடியூபில் பார்த்து தெரிந்து கொண்ட மோகன் ஜி மகள், 7ஜி ரெயின்போ ரெயின்போ காலனி படத்தில் வரும் காட்சியை காண்பித்து, "ஏன் இந்த அக்கா செத்துப் போய்ட்டாங்க மாமா?. ஏன் இந்த மாதிரி சீன் வச்சு இருக்கீங்க அவங்க பாவம்ல. அவரு எப்படி அழுறார் பாருங்க" என அந்த திரைப்படத்தைப் பற்றி மோகன் ஜி மகள் கேட்டுள்ளார்.

Mohan G daughter question to director selvaraghavan about movies

Images are subject to © copyright to their respective owners

குழந்தை இப்படி கேட்டதுமே ஷாக்கான செல்வராகவன், தன்னிடம் யாருமே இப்படி கேட்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

"7G-ல ஏன் அப்படி ஒரு சீன் வெச்சீங்க.. பாவம்ல".. மோகன் G மகள் கேள்வி.. ஷாக் ஆன செல்வராகவன் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mohan G daughter question to director selvaraghavan about movies

People looking for online information on Bakasuran, Mohan g, Selvaraghavan will find this news story useful.