"பெண்கள் அடங்கி இருக்கனும்ன்னு படம் எடுக்குறாரா?".. மோகன் ஜி மனைவியின் பதில்!!. Exclusive!!
முகப்பு > சினிமா செய்திகள்பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளவர் இயக்குனர் மோகன் ஜி. இவரது இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் 'பகாசூரன்'. இந்த திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Also Read | Bakasuran : படங்களில் சாதிக்கருத்துக்கள் பேசுவது குறித்து செல்வராகவன் சொல்வது என்ன ? EXCLUSIVE
ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் "பகாசூரன்" படத்தை தயாரித்துள்ளது. இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், தாராக்ஷி, ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா, ஆகியோர் நடித்துள்ளனர். சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு இயக்குனர் மோகன் ஜி, அவரது மனைவி ஆகியோர் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இதில், அவர்களின் மகளும் உடன் இருந்தார். இந்த பேட்டியில் கணவர் இயக்கும் திரைப்படங்கள் குறித்து மோகன் ஜி மனைவியும் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, கணவர் எடுக்கும் திரைப்படங்களை சுற்றி உருவாகும் விமர்சனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மோகன் ஜி மனைவி, "அவரு அந்த மைண்ட்செட் ல படம் எடுக்கல. இந்த மாதிரி ஒரு பேரு வரும்னு அவரு எடுக்கல. அது தானா நடந்துடுச்சு. அவர் பேசுற விஷயம் எல்லாமே கரெக்ட்டா இருக்கு. இப்ப தப்பா இருந்தா தான் தப்புன்னு சொல்லணும். யாருமே பேசாத விஷயம் தான் அவர் பேசுறாரு.
அதனால நான் அவருக்கு சப்போர்ட் தான் பண்ணுவேன். எந்த பிரச்சனை வந்தாலும் நான் Face பண்ண ரெடியா இருக்கேன். நீ தைரியமா பண்ணனும்ன்னு தான் நான் எப்பவும் சொல்லுவேன். நீ என்ன வேணா பண்ணு உன் சப்போர்ட்டா பின்னாடி நான் எப்பவுமே இருப்பேன்னு சொல்லுவேன். எப்பவுமே அவரை Encourage பண்ணுவேன். என்ன நடக்குதோ பாத்துக்கலாம், நீ அரெஸ்ட் ஆனாலும் நான் வந்து பெயில் எடுக்குறேன்னு.
திரௌபதி படம் வந்தப்போ ரொம்ப பயந்தேன். அப்ப நிறைய Issue வந்துச்சு. அதுக்கப்புறம் என்ன வந்தாலும் பாத்துக்கலாம்ன்னு சொல்லிட்டேன். நீ பண்றது தப்பு கிடையாது. Awareness வர்ற மாதிரி தான் நீ பண்ணிட்டு இருக்கே. அதுனால என்ன ஆனாலும் பரவாயில்ல. நமக்கு சப்போர்ட் பண்ணவும் ஆளுங்க இருக்காங்க" என்றார்.
தொடர்ந்து, மோகன் ஜி திரைப்படங்களில் பழமைவாதி போல படம் எடுப்பது பற்றியும், 30 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வீட்டிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தும் படி திரைப்படங்கள் எடுப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவரது மனைவி, "அவர் அப்படி சொல்லமாட்டாரு. ஏன்னா ஒரு பொண்ணு வீட்ல எப்படி இருக்காங்களோ அது அவருக்கு தெரியும். அத Base பண்ணி தான் நிறைய விஷயம் பண்ணுவாரு. ருத்ரதாண்டவம், திரௌபதி படத்தில் வர சீன்ஸ் எல்லாம் எனக்கு புடிச்ச மாதிரி தான் இருந்தது. ஒரு பெண் எப்படி இருக்கணும்ன்னு நான் விரும்புற மாதிரி தான் இருந்துச்சு. அதனால அவர் அப்படி சொல்றதுக்கு சான்ஸ் இல்ல" என கூறினார்.
Also Read | தங்கலான் படப்பிடிப்பில் இருந்து சீயான் விக்ரம்.. "லுக்கு சும்மா தெறியா இருக்கே"...
"பெண்கள் அடங்கி இருக்கனும்ன்னு படம் எடுக்குறாரா?".. மோகன் ஜி மனைவியின் பதில்!!. EXCLUSIVE!! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bakasuran Selvaraghavan On Mohan G And Pa Ranjith Films
- Selvaraghavan On Girls Profile Pic Opinion Bakasuran Mohan G
- Director Mohan G About His First Movie Salary
- Director Mohan G About His Salary For Directing Films
- Manjima Mohan Gautam Karthik Visit Palani Murugan Temple
- Im Pa.Ranjith Facebook Friend Mohan G In Bakasuran Press Meet
- Mohan G Speech About Caste In Bakusuran Press Meet
- Selvaraghavan About Acted In Mohan G Bakasuran Movie
- Mohan G Meet PMK Ramadoss And Gifted Ponniyin Selvan Books
- Mohan G Directorial Bakasuran Starring Selvaraghavan Trailer
- Manjima Mohan Gautam Karthik Family Photo In Wedding
- Aishwarya Rajinikanth Wishes Manjima Mohan Gautam Karthik Wedding
தொடர்புடைய இணைப்புகள்
- Mohan G-க்கு வந்த மிரட்டல், என் புருஷன் எடுக்குற படத்துல என்ன தப்பு இருக்கு?Wife Interview Bakasuran
- இடிச்சி கட்ட 3 கோடி செலவு ஆகும்…தள்ளு வண்டி இழுத்து தாத்தா கஷ்டப்பட்டு கட்டின வீடு🥺Mohan G Home Tour
- 'Vetrimaran - Mohan G'.. சாதி இருக்கா? இல்லையா?.. இயக்குநர்கள் சொல்வது என்ன? காரசார பேச்சு
- "உன் கண்ணு உருத்துதா.." பகாசூரன் மேடையில் காவி ஏன்? செய்தியாளரிடம் சீறிய மோகன் ஜி
- Selvaraghava-க்கு கண்டிப்பா இந்த வருஷம்.Awared கிடைக்கும்.. மேடையிலே சொன்ன Natty
- "நா யாரையும் எதிரியா பாக்கல" இயக்குனர்களுக்கு பொறுப்பு இருக்கு.. Bagasuran Mohan G Bold Speech
- "சாதி இருக்கு.. நான் சொன்னா திட்டுறாங்க.. வெற்றிமாறன் சொன்னா.." பொங்கி எழுந்த மோகன் ஜி..! | Mohan G
- "நாளைக்கே நான் செத்து போனா கூட, இவனுங்க..!" - Selvaraghavan Red Hot Interview | Bakasuran
- "உங்க வீட்டு பாத்ரூம் கழுவ மட்டும் அவங்க வரணுமா?" MOHAN G & LAKSHMY RAMKI RED HOT பேட்டி
- "திரௌபதி 2 எடுக்க வைச்சுடாதீங்க..! கேமரா முன்னாடி அத சொல்ல முடியாது மேடம்..!" RED HOT INTERVIEW
- "மரண தண்டனை தரணும்", சத்தியா வழக்கில் Director MOHAN G ஆவேசம்...
- "PONNIYIN SELVAN மேல வெறுப்பு வந்ததுக்கு.." MOHAN G காரசார SPEECH | PS 1, Vetrimaaran Controversy